பக்கம்:கல்வி உளவியல்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 227 ருேம். பல தூண்டல்கள் போட்டியிடுங்கால் அந்நேரத் தேவைக்கு ஏற்றவற்றை மட்டிலும் தேர்ந்தெடுக்கின்ருேம். எடுத்துக்காட்டாக கம்முடைய சிந்தையைக் கவரும் நூல் ஒன்றினப் படித்து வருங்கால், நம் அறையின் சுவரிலுள்ள கடிகாரத்தில் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிக் ஒலிகளைக் கேட்பதில்லை. சூழ்நிலையின் கண்ணுள்ள தூண்டல்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பெரும்பாலும் தற்கேற்பத் துலங்குவதையே காம் கவனம் என்ற பெயரால் வழங்கு கன்ருேம். கவனமில்லாச் படம் 26 மனத்தை ஓர் ஒளிப்படப் பெட்டிக்கு ஒப்பிடலாம். எங்ங்னம் விளிம்பில் இருப்பவை பதியாமல் குவியத்தில் இருக்கும் பொருள்கள் மட்டுமே படத்தில் பதிகின்றனவோ, அங்ங்னமே மனத்திலும் குவியத்தி லுள்ள பொருள்களே கவனம் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓர் உயிரியின் செயலைப் படத்தில் (படம் 26) காட்டியுள்ளவாறு ஒரே மையத்தைக் கொண்ட மூன்று வட்டப் புலன்களாலாகியது எனக்கருத லாம். நடுவிலிருப்பது கவனத்தின் புலம் ; கனவு நிலையிலுள்ளது. இடை யிலிருப்பது தெளிவற்ற மங்கலான கனவுநிலைப் பகுதி. வெளிப்புறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/249&oldid=778034" இலிருந்து மீள்விக்கப்பட்டது