பக்கம்:கல்வி உளவியல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கல்வி உளவியல் அறிவதற்கு மேலும் பல புள்ளி விவரங்களை (எடுகோள்களை**)த் திரட்டி அவற்றிற்கு விளக்கம் தருதல் மூன்ருவது படியாகும். பிறகு இவற்றி லிருந்து பொதுவிதிகளை உண்டாக்குதல் நான்காவது படியாகும். இப் பொதுவிதிகளைப் புதிய செயல்களில் அல்லது நிகழ்ச்சிகளில் பொருத்திப் பார்த்தல் ஐந்தாவது படியாகும். ஆகவே, அறிவியல் அறிவு நிச்சய மானது; கம்பத் தகுந்தது ; பிறரால் சரிபார்க்கக்கூடியது. பல கருவி காணங்களையும் அளவை முறைகளையும் மேற்கொண்டு திரட்டப்பெற்ற இவ்வறிவு மிகத் திட்டமானது. உணவியல் உயிரியின் மனச் செயல்களை விரித்துரைக்கும் துறை என்து மேலே கூறிளுேம். சூழ்நிலைக்கேற்றவாறு தனிப்பட்ட உயிரியின் செயல்கண்ப்பற்றிய தகவல்களே இத்துறை விரித்துரைக்கும் பொருள். ஏனைய அறிவியல்துறைகளைப்போலவே இத் துறையிலும் தகவல்கள் கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கலால் திரட்டப்பெறுகின்றன. இத் தகவல்களைக் கொண்டு அவற்றினுள் அமைந்து கிடக்குக் தொடர்பு கனக் காண முயலுகின்றது. இத் தொடர்புகளே உளவியல் விதிகள். இவை பருக்து கோக்காக மனிதச் செயல்களையும் அவற்றின் இயல்பை யும் எடுத்துரைக்கின்றன. இவ் விதிகள் மனித நடத்தையைப் புரிந்துகொன்னத் துணைபுரிவதுடன் அதனை முற்கூறவும் (predict) கட்டுப் படுத்தவும் பயன்படுகின்றன. உணம் மிகவும் சிக்கலானது. அதளுேடு ஊடாடும் பொருள்க ளடங்கிய சூழ்கிலேயும் மக்களடங்கிய சமூகச் சூழ்நிலையும் மாறிக் கொண்டிருக்கும் இயல்புடையவை. அன்றியும், சடப்பொருள்கள் போலன்றி உளம் சுயேச்சையாக இயங்கவல்லது. இந் நிலையில் உளத் தைப்பற்றி அறியும் தகவல்கள் முற்றிலும் நம்பக்கூடியமுறையில் இல்லை. ஆகவே, உணவியல் முற்றின அறிவியல் ஆகாது ; அதனை இளம்பருவத் திலுள்ள அறிவியல் என்றே கூறவேண்டும். மனிதனுடைய செயலைத் திட்டமாக முன்னரே அறிந்து முற்றிலும் அதன் மீது ஆட்சிகொள்ள முடியும் என்றுகூறுவது கடைமுறையில் இயலாததொன்று. கடத்தைக் கொள்கையினர் அஃது இயலுமென்று கூறினும் சிறந்த உளவியலறிஞர். கள் அதனை ஒப்புக் கொள்ளார். எனினும், உளவியல் ஓரளவு பிறரை அறிக்கு அவர்மேல் ஆதிக்கம் பெறமுடியுமென்று கூறுவதை அனை வரும் ஒப்புக்கொள்வர். இஃது இயலாவிடில் சமூகவாழ்வு எங்ங்ணம் கடையெலும் ? - ہمہ۔ سویم ہی* sxونت:مد نتھیمس*بیین ہمہ:...w-بہ

    • siggars-data. T
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/25&oldid=778036" இலிருந்து மீள்விக்கப்பட்டது