பக்கம்:கல்வி உளவியல்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கல்வி உளவியல் லிருப்பது தூய்மையான உடல் நிலை பற்றியவையாயும் கனவிலி கிலேயிலு: மிருப்பது. ஏதாவது ஒரு மிகச்சிறிய பொருளைக் கூர்ந்து நோக்கும் பொழுது கடுப்பகுதி மிகக்குறுகியிருக்கும் ; பிற சமயங்களில் அது மிகவும் விரிந்து ஓர் இயற்கைக் காட்சி முழுவதையும் அடக்கக் கூடியதாக இருக்கும். கவனத்தை நெறிப்படுத்தும் கூறுகள் : தூண்டல்களின் தேர் தலே கவனம் என்று மேலே கண்டோம். இத்தேர்தலில் எக்கூறுகள் பங்கு பெறுகின்றன? சரியான முறையில் மூளையை அடையும் தூண்டல்களே. கம் செயலே அறுதியிடுகின்றன. தேர்தலின்றிப் படபடப்பாகவுள்ள தூண்டல்கள் சில சமயம் விரைவில் மறைகின்றன; அல்லது நரம்பு மண்ட லத்தின் மேலிடங்களில் வன்மையற்ற பதிவுகளை உண்டாக்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பெற்ற கிளர்ச்சிகளே மனத்தில் புலன் காட்சிகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை உண்டாக்கு கின்றன ; இவற்றின் விளைவாகத் தனியாளிடம் நிலைத்த மாற்றங்கள் கற்றல் மூலம் நடைபெறுகின்றன. கவனத்தை ஈர்த்தல் எல்லாத் துறை கட்குமே வேண்டற்பாலது. வணிக விளம்பரத்தின் நோக்கம், பொருள் கொள்வோரின் கவனத்தை ஈர்ப்பது. ஆசிரியரின் நோக்கம், மானக்கர் களின் கவனத்தை ஈர்ப்பது. - - கனவு ஓட்டம்” எப்பொழுதும் தெளிந்த ஆற்றெழுக்கைப் போன்ற தன்று. அது தவளைப் பாய்ச்சல் போல் அங்குமிங்கும் தாவிச் செல் கின்றது. அஃது ஒரே திசையில் நெடுநேரம் செல்வதுமில்லை. நம்முடைய கவனம் பல பொருள்களுக்கிடையே ஊசலாடலாம். கவனத்தைப் பெறு வதற்கும் அதை நிலை கிறுத்துவதற்கும் சாதகமான கூறுகள் உள்ளன. அவற்றைப் புறவயமானவை, அகவயமானவை என்று இரண்டு வகை யாகப் பிரிக்கலாம். நம்முடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய பொருள்களின் சிறப்பியல்புகளும் பண்புகளும்- புறவயமானவை. தனியாளின் வாழ்க்கையில் வளரும் கவர்ச்சிகள், பழக்கங்கள், மனப்போக்குகள் போன்றவை அகவயமானவை. முதலில் புறவயமானவற்றை நோக்குவோம். அவை : (1)துண்டல் வகை : ஒளி, அல்லது ஒலித்துண்டல்கள் பிற வற்றைவிடச் சிறப்பானவை. இப்புலன்களிலும் சில பண்புகள் இன்னும் சாதகமான கிலேமைகளை உண்டாக்குவன. (எ.டு. கிச்சிலி, மஞ்சள் நிறங்கள். வண்ண விளம்பரங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர் is Bors; gill--to - Stream of consciousness. 17 ψ9 uðlassir - characteristics. 1 Busirussir - qualities.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/250&oldid=778038" இலிருந்து மீள்விக்கப்பட்டது