பக்கம்:கல்வி உளவியல்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கல்வி உளவியல் அனிச்சைக் கவனம் : ஒரு தடவைக்கு ஒரு கூருகக் கொண்டு கேர் முறையில் இஃது அறுதியிடப்பெறும். ஒரு குழவியின் கவனம் அதனைச் சுற்றியுள்ள நிலைமாறும் விசைகளைப் பொறுத்தது. குழந்தை பசியினலோ கோவினலோ துன்பமுருமலும், வேறு முறையில் ஈடுபடா மலும் இருந்தால் ஒவ்வொரு மாற்றமும் அதனிடம் திடீரென்று கவர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்யும். இக்கவனத்தை உண்டாக்கும் தூண்டல்கள் மிகவும் வன்மையானவை. நாம் உளவியல் பாடம் படித்துக் கொண்டிருக்கும்பொழுது இரண்டு மூன்று வெடியின் ஒலிகள் கேட்கின்றன ; படிப்பதை நிறுத்திவிட்டு அவ் வொலியைப்பற்றி ஆராய்கின் ருேம். உடனே அது கம்பன் திருநாள் நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்று எண்ணி மீண்டும் படிக்கத் தொடங்குகின்ருேம். இச்சைக் கவனம்: சற்று வயது வந்த குழந்தை அல்லது குமரப் பரு வத்தினன் சமூகஊக்கிகளால் ஆதிக்கம் பெற்றிருப்பதால் தன்னுடைய கவனத்தைப் பெரும்பாலும் அகவயக் கூறுகளால் அடக்கியாள்கின்றன். இதற்கு அவன் வன்மையான புறவயக்கூறுகளை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டும். அன்றியும், அதே சமயத்தில் முரண்பட்டுள்ள அகவயக்கூறுகளுடனும் போராட வேண்டிவரும். இதனை நாம் மன உறுதியுடன் உழைக்கின்ருன் என்றும், கவனத்தை ஒருமுகப்படுத்து கின்ருன் என்றும் கூறுகின் ருேம். மூன்று வகைக் கவனங்களிலும் இதில்தான் அதிக ஆற்றல் செலவழிகின்றது. சமூகமும் இக்கவனத்தைத் தான் அதிகமாகப் புகழ்கின்றது; பாராட்டுகின்றது. பழக்கக் கவனம் : இதுதான் மிகவும் திறனுடையது ; மிகவும் விரும்பத் தக்கது; கிபுணரிடமும் மேதையிடமும் காணப்பெறுவது. இதில் அமைதிக்கலவினை விளைவிக்கும் கூறுகள் இல்லை. தனியாளிடம் கவனிக்கும் பழக்கம் வளர்ந்து விட்டது : கவர்ச்சி மீதுார்ந்து நிற்பதால் போட்டியிடும் கூறுகளுக்கு வாய்ப்பே இல்லை. இக்கவனத்தின்பொழுது செலவழியும் ஆற்றலும் மிகக் குறைவே. ஒரு வேலையை முடித்து விட்டோம் என்பதாலும் மகிழ்ச்சி கிட்டுகின்றது. மேற்கூறிய மூவகைக் கவனத்திலும் அகவயப் புறவயக் கூறுகள் பங்கு பெறுகின்றன. சாதாரணமாக ஒரு சராசரித் தனியாள் எந்த ஒரு புதிய பாடத்தை மேற்கொள்ளும்பொழுதும் இந்த மூன்று படிகளையும் கடந்தே செல்லுகின்ருன். முதலில், கவனத்தை அறுதியிடும் கூறுகள் தாமாக எழுகின்றன; சிறப்பாகப் புதுமையைக் கூறலாம். புதுமையின் பயன் குறையக் குறைய, ஒரு சமயத்தில் வலிந்து கவனத் தைச் செலுத்தவேண்டிய கிலே ஏற்படும். அப்பொழுதும் சிறிதும் தளராது ஒன்றுக்கொன்று துணைபுரியும் அகவயக் கூறுகளை வளர்த்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/256&oldid=778050" இலிருந்து மீள்விக்கப்பட்டது