பக்கம்:கல்வி உளவியல்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 235 அவன் மிகவும் முதிர்ச்சியடைந்த இறுதிநிலைக் கவனத்தை எய்துதல் கூடும். கவனம் ஊசலாடுதல்” : ஒருவருடைய கவனப் பொருத்தப் பாடுகளின் நிலையும் திட்டமானதன்று. கவனம் காட்சியின் ஒரு பாகத்திலிருந்து மற்ருென்றுக்குத் தாவிக்கொண்டேயிருக்கின்றது. இது பெரும்பாலும் ஒன்றைவிட மற்ருென்று எளிதானதும் மகிழ்வூட்டக் கூடியதுமான இரண்டு முரண்பட்ட தூண்டல்களால் நிகழ்கின்றது. ஒருவர் அங்கியர் குழுமியுள்ள ஓர் அறைக்குள் சென்ருல், அவரது கண்கள் அங்குமிங்கும் அசைவதைக் காணலாம். இது கவன ஆராய்ச்சி யாகும். அன்றியும், அவர்பால் அனிச்சைக் கவனத்தையும் இடை இடையே காணலாம். கவனத்தின் கால அளவு : எவ்வளவு நேரம் ஒரு பொருளைக் கவனிக்கலாம்? சாதாரணமாகப் பொது மக்கள் ஒரு வேலையின் மீதுள்ள கவனம் ஒரு வாரக்கணக்கில், மாதக்கணக்கில், ஒருவரது வாழ்நாளின் பெரும்பகுதிகூட நீடிக்கின்றது என்று கருதுகின்றனர். இவர்கள் கவனம் என்பதன் பொருள் அறியாதவர்கள் ; இவர்கள் ஈடுபாடு அல்லது கவர்ச்சியை கினைந்து கொண்டு கவனத்தைப் பற்றிப் பேசுகின்றனர். ஒரு பொருளில் நாம் ஒரு மணி நேரம் ஈடுபடு கிறதாகக் கொள்வோம். இப்பொழுது ஒரு மணி நேரமும் நாம் கவனித்ததாக கினைக்கின்ருேம். உற்று நோக்கிளுல், உண்ம்ை அவ்வாறில்லை என்பதை அறிவோம், பல சமயங்களில் நம் மனம் அலைந்து திரிந்து அதனை மீட்டும் மீட்டும் கவனிக்க வேண்டிய பொருளுக்கு இழுத்திருக்கின்ருேம். உளவி யலார் பல விளுடிகளே ஒரு பொருளை . கவனிக்க இயலும் என்று கூறுகின்றன்ர். இந்தப் படத்தைச் (படம் 27) சற்று நேரம் உற்று நோக்கில்ை, அது கவனத்தின் ஊச லாட்டத்தின் காரணமாக, ஒரு சமயம் குவிந்த திடப் பொருளாகவும் பிறிதொரு சமயம் குழிந்த** திடப்பொருளாகவும்: காணப்பெறுவதை அறியலாம். ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் ஒரு பிரச்சினை - யில் ஈடுபட்டிருக்கும்பொழுது, நாம் தங்கி படம் 27 Soross-fluctuation. soare, oral-duration. A sessésconvex. 34.6%lis; - concave. **śLüGurgår - solid.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/257&oldid=778052" இலிருந்து மீள்விக்கப்பட்டது