பக்கம்:கல்வி உளவியல்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 237 சிக்கலான முழுமை அமைப்பில் இருந்தால்தான் நாம் பல பொருள்களைக் கவனித்தல் இயலும். நாம் ஒரு சமயத்தில் கவனிக்கும் பொருள் எளிய பொருளாய் இராவிடினும் ஒற்றைப் பொருள்தான். இந்த ஒருமைப்பாடு அமையாவிடில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைக் கவனித்தல் முடி யாது. பல்வேறுபட்ட செயல்கள் ஒன்ருகச் சேர்ந்து ஒரு செயல் முறையாகின்றது. ஆனல், சாதாரண மக்கள் வேறுபட்ட இரண்டு செயல்முறைகள் ஒரே சமயத்தில் கவனிக்கப்பெறுகின்றன என் து கூறலாம். அதன் விளக்கத்தைக் கவனத்தின் பிரிவு' என்பதன் கீழ்க் 安耶G侬S。 கவனத்தின் பிரிவு : கவனத்துடன் செய்ய வேண்டிய இரு செயல்களை ஒரே சமயத்தில் செய்வதைத்தான் கவனப்பிரிவு என வழங்குகின்ருேம். உண்மையில் இவ்வாறு கவனப் பிரிவு என்பது ஒன்று உண்டா என்பது விஞ. "அஷ்டாவதானம்', 'சதாவதானம்’ செய்ய வர்கள் உண்மையில் தங்கள் கவனத்தை இவ்வாறு பிரிப்பதுபோல் தோன்றினும், அவர்களுடைய கவனம் ஒன்றிலிருந்து மற்றென்றுக்கு விரைவாகப் பாய்ந்து மீண்டும் அதே செயல்களுக்குத் திரும்புகின்றது. கவனம் பாயும் வேகத்தை நாம் உணர முடியாததால்,உண்மையில் கவனம் பிரிவதுபோல் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, சில சமயங்களில் நாம் எழுதிக்கொண்டே பேசுவதையும், மிதிவண்டியில் போகும்பொழுதே நண்பருடன் உரையாடுவதையும் கூர்ந்து கோக்கினுல் இரண்டு செயல்களில் ஒன்று பொறிச் செயல்போன்று கவனமின்றியே நடை பெறக்கூடியது என்பதை உணரலாம். இரண்டு செயல்களும் கவனத்தை வேண்டினல், கவனம் ஒன்றிலிருந்து இன்னென்றுக்கு விரைந்து தாவுகின்றது. சிலர் நான்கு கணக்குகளை ஒரே காலத்தில் கவனிக்கிருர்களே !' என்ருல், அவரது கவனம் ஒன்றிலிருந்து பிறவற்றிற்கு வியத்தகு ஆற்றலுடன் மிகவிரைவாகச் செல்லுகின்றது. கவனமின்மை : குழந்தைகளிடம் கவனமின்மை ஆசிரியர் சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று. கவனம் இல்லையென்ருல் கவனமே இல்லை என்பது பொருளன்று. கவனம் ஒரு பொருளிலிருந்து இன்னெரு பொருளுக்குத் தாவுகின்றது; ஒன்றும் நன்ருக கவனிக்கப் பெருமல் போகலாம். ஒரு வகுப்பிலுள்ள மாளுக்கன் சாளரத்தின் கதவினையும், கூரையின்மீது ஒடும் ஒளுனையும், ஆசிரியரின் வழுகதை மண்டையையும், அடுத்தவன் தூங்குவதையும் முறையே கவனிக்கலாம். se gener##er ofia-division of attentiono o seusori8sraolo- imattention.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/259&oldid=778056" இலிருந்து மீள்விக்கப்பட்டது