பக்கம்:கல்வி உளவியல்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 கல்வி உளவியல் குழந்தைகளின் புலன்காட்சி புலனிடானவை; நுணுக்கமற்றவை. அவர்கள் நேரில் பார்ப்பவைகளுக்கும் பார்ப்பதாக நினைப்பவைகட்கும் வேற்றுமை அவர்கட்குப் புலப்படுவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் பொய்’ சொல்வதாக நாம் சில சமயங்களில் கருதுகின்ருேம். அவர்கள் ஒவியங்கள் வரைவதிலும் இக்குறையே காணப்பெறுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை ஒரு குதிரையை வரையும்பொழுது தான் பார்ப்பதை வரைகிறதில்லை ; தன் மனத்தில் தோன்றுவதையே வரை கின்றது. பயிற்றலில் சிறுவர்களின் புலன் காட்சியின் பரப்பை விரிவடையச் செய்யவேண்டும். புலன் காட்சியே எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் அடிப்படை. எண்ணங்கள் அனுமானங்களுக்கு அடிப்படை. ஆகையால், புலன்காட்சிகள் திருத்தமாக இருத்தல் வேண்டும். புலன்காட்சியின் அடிப்படை : மேற்கூறியவற்றிலிருந்து புலன் காட்சியின் அடிப்படை புலன்உணர்ச்சி என்பதை அறிகின்ருேம். எனவே, இந்த அடிப்படை நன்கு அமையவேண்டும். குழந்தையின் புலன் உணர்ச்சிகள் உண்மையானவைகளாகவும் சரியானவைகளாகவும் இருத் தல் வேண்டும். அஃதாவது, குழந்தை பொருள்களைச் சரியாகப் பார்க்க வும், செய்திகளைச் சரியாகக் கேட்கவும், பொருள்களைச் சரியாக முகரவும் கற்கவேண்டும். இப்பயிற்சிக் குழந்தைக்குச் சரியாக ஏற்படாவிடில் அறிவுச் செயல்முறைகள் யாவும் தவருண அடிப்படையில் அமைந்து விடும். குழந்தையின் கட்புலன் டிணர்ச்சி சரியாக இராவிடில், அதன் சிந்தனை தவருனதாகும். குழந்தை முதன்முதலாகக் கேட்கும் ஒரு சொல்லின் கேள்விப்புலன் உணர்ச்சி சரியாக இல்லாவிடில், அச் சொல்லை உச்சரிக்கும்பொழுது அது தவருகவே உச்சரிக்கின்றது. அச் சொல்லைச் சரியாகப் பார்க்காவிடில், அதைத் தவருகவே எழுதுகின்றது. எனவே, சரியாக உற்றுநோக்கலில் பயிற்சிதருதல், அஃதாவது பல்வேறு புலன்களையும் சரியான முறையில் பயன்படுத்துதல் மிகவும் இன்றியமை யாதது. குழந்தை பள்ளிக்கு வருவதற்கு முன்பே இப்பயிற்சி அதற்கு அளிக்கப்பெறுதல் அவசியமாகும். மாண்டிசோரி பள்ளி போன்ற குழந்தைப் பள்ளிகளில் இதற்கு நல்ல வாய்ப்புக்கள் அளிக்கப்பெறுகின் றன. ஆயினும், குழந்தை ஆசிரியரிடம் வந்தவுடனேயாவது அதன் விளையாட்டுக்களாலும் விளையாட்டுமுறைப் பயிற்சிகளாலும் அவர் அக் குழந்தைக்கு புலப்பயிற்சிக்கு வாய்ப்புக்களை நல்குதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/262&oldid=778064" இலிருந்து மீள்விக்கப்பட்டது