பக்கம்:கல்வி உளவியல்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 243 அவற்றிற்கு விவரங்கள் குறைவு. புலன் உணர்ச்சிகள் தெளிவானவை; நிறைவுடனிருப்பவை. புலன் உணர்ச்சியில் உள்ள பல நுட்பங்கள் சாயலில் இல்லாமையே இதற்குக் காரணமாகும். (4) சாயல் புலன் உணர்ச்சியைவிட நிலை குன்றியது ; ஊசலாடும் தன்மையுடையது. தூண்டல் உள்ளவரை புலன் உணர்ச்சி நடை பெற்றுக்கொண்டே யிருக்கும். சாயலுக்கு நேரான தூண்டலொன்று மின்மையால், நிலைத்த கவன முயற்சியைக் கொண்டே அதனே மனத் தின் முன் நிறுத்தக்கூடும். கவனம் கணந்தோறும் ஊசலாடுக் தன்மைய தாதலின், சாயலும் மாறிக்கொண்டே வருகின்றது. (5) சாயல் அகவயத் தன்மையது ; புலன் உணர்ச்சி புறவயத் தன்மையது. புலன் உணர்ச்சி தூண்டலால் அறுதியிடப் பெறுகின்றது; சாயல் தனியாளின் கவர்ச்சியால் தீர்மானிக்கப்பெறுகின்றது. (6) வுட்வொர்த்" என் பார் குறிப்பிடுவதைப்போல, புலன் உணர்ச்சியைவிட சாயல் நடைமுறைப் பயனிலும் குறைவுடையது. புலன் உணர்ச்சிக்கு அமைந்ததோர் புறப்பொருள் உண்டாதலின் காம் அதை உற்று நோக்கி முன் காணுத உண்மைகளைக் காணலாம். சாயலில் அங்ங்ணம் காணும் வாய்ப்பு இல்லை ; அதில் கற்பனை உண்மைகளையே காண முடிகின்றது. கற்பனை வகைகள் : கற்பனையை மீள் ஆக்கக் கற்பனை", ஆக்கக் கற்பனை, அல்லது படைப்புக் கற்பனை என இரண்டு வகை யாகப் பிரித்துப் பேசுவர். ஒரு பொருளையோ, நிகழ்ச்சியையோ திரும்பக் காண்பது மீள் ஆக்கக் கற்பனையாகும். நாம் ஒருமுறை பார்த்த தஞ்சைப் பெரிய கோயிலையோ சிற்றன்ன வாசலின் சிற்பத்தையோ கினைக்கின் ருேம்; அல்லது முதல்நாள் கல்லூரி அல்லது தமிழ்ச் சங்கத்தில் நிகழ்ந்தவற்றைக் கருதுகின் ருேம். இவ்வாறு கினப்பதில் கம் மனத்தில் தோன்றும் கோயிலும் உண்மைக் கோயிலும் ஒற்றுமையுடையவை. : அங்ங்னமே கிகழ்ச்சியும் நிகழ்ச்சியின் சாயலும் ஒற்றுமையுடையவை. இவை மீள் ஆக்கக் கற்பனைக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். கினைவு, மீள் ஆக்கக் கற்பனையாகும் ; புலன் காட்சியில் தோன்றியதே மீண்டும் மனத்தில் தோன்றுகின்றது. உயர் கற்பனையில் பழைய அனுபவங்களைக் கொண்டே புதிய சேர்க்கையை ஏற்படுத்திக்கொள்ளுகின் ருேம். (எ-டு) --- வட்வொர்த்- woodworth. sotsisssä - reproductive imagination. Si 3,333, 5 bi.8* - productive or creative "imagina tion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/265&oldid=778070" இலிருந்து மீள்விக்கப்பட்டது