பக்கம்:கல்வி உளவியல்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 249 அக் கற்பனை ஒழுங்குபடுத்தப்பெற்று ஏதாவது ஒரு நோக்குடன் நெறிப் படுத்தப் பெறவேண்டும். இத்தகைய கற்பனை தான் சிந்தனை என்பது. சிந்தனை நெறிப்படுத்தப்பெற்ற கற்பனை ; குறியீடுகளைக்கொண்டு இயங் கும் ஒருவகை மனத்தின் செயல். சிந்தனையின் கருவிகள் : சிந்தனையில் பங்குபெறும் கருவிகளைப் பொருள், கருத்து, குறியீடு என்று மூவகையாகப் பகுத்துப் பேசலாம். இவற்றை ஒவ்வொன் ருக விளக்குவோம். (1) பொருள் : பொருள்களில் நாம் நேரில் காணும் பொருள்களும், நினைவுகூரும் பொருள்களும், கற்பனை செய்யும் பொருள்களும் அடங்கும். (i) தனிப்பொருள்கள் : முன்னேர் என்று கூறும்பொழுது தந்தை யையோ பாட்டனையோ நினைக்கின்ருேம். பொது உண்மை விளங்க வேண்டுமாயின் தனி எடுத்துக்காட்டுக்களை நோக்குகின்ருேம். காந்தம் இரும்பை இழுக்கும் என்பதை அறியவேண்டின் ஒரு காந்தத்தைக் கொண்டு இரும்பு ஆணி இழுக்கப்பெறுகின்றதா என்று கவனிக்கின்ருேம். (ii) பொதுமைப்படுத்திய பொருள்கள் : வடிவ கணிதத்தில்' ஒரு முக்கோணம் வரைந்து ஒரு கோட்பாட்டை நிறுவுகின்ருேம். ஆல்ை, அதைச் சமபக்க முக்கோணமென்ருே நேர் முக்கோணமென்ருே கட்டுப் படுத்துவதில்லை. நாம் கருதும் முக்கோணம் எல்லாவகை முக்கோணங் களையும் அடக்கியாள்கின்றது; அது ஒரு பொதுமைப்படுத்திய பொருள். இங்ங்ணம் வடிவ கணிதம் பொதுப்பொருள்களைப்பற்றிக் கூறுகின்றது : ஆனல், தனிப்பொருளைக்கொண்டு விளக்குகின்றது. (iii) இயங்கு தன்மை வாய்ந்த பொருள்கள் : ஒரு பொருளின் பிரச்சினையைத் தீர்க்க முயலுங்கால் அப்பொருள் இயற்றும் வினையைச் சிந்திக்கின் ருேம். (எ-டு. வண்டி ஏறிச்செல்ல உதவும், ஆணி அடிப்பதற்கு உதவும் என்று எண்ணுகின்ருேம். பழைய அனுபவத்தால் அதன் வெற்றுத்துண்டலே விட நுட்பமானதொரு பொருளை அதில் காண்கின் ருேம். (2) கருத்துக்கள்’’ : சிந்தித்தலில் பெரும்பாலும் கருத்து நிலையை அதிகமாகக் காண்கின் ருேம். மனச்சாயல்களையும் வெற்று கிலே உணர்வு' களையும் கையாளுவதே கருத்துகிலை எனப்படுவது. புல னிடான பொருள்களையும் இயக்கங்களையும் கையாளுவதற்கு மாருக, சிங் தனையில் கருத்து நிலைச்செயலும் கருத்துக்களைக் கையாளுதலும் நடை 7osgen-tool. 7 ıalışsı gerî5° - geometry. *2305ğğı - concept. 78 &(55 Sf5&D - ideation. 74udsorëssruso – mental image. 75 Gsufhg.6850 2-&#64 - abstraction.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/271&oldid=778086" இலிருந்து மீள்விக்கப்பட்டது