பக்கம்:கல்வி உளவியல்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கல்வி உளவியல் இஃது ஒர் எடுகோளைப் பிறிதொரு எடுகோளுடன் ஒப்பிட்டு ஆய்வதற்கு வசதியாக இருக்கும். (3) பொருந்தாத முடிவுகளைப் புறக்கணித்தல் : மேலே திரட் டிய எடுகோள்களில் சில பிரச்சினைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அவை எவை என ஆய்ந்து அவற்றை நீக்கவேண்டும். சில சமயம் திடீரென்று ஒரு ஊகம் தோன்றக்கூடும். அது பிரச்சினைக்கே தீர்வு காணக்கூடியதாகவும் இருக்கும். இது நெடுநாள் பயிற்சியினலேயே ஏற்படும். (4) சரியான முடிவுகளை மதிப்பிடல் : நாம் ஒரு கருதுகோளே” (கற்பிதக் கொள்கை) அமைத்துக்கொண்டு அதைச் சோதிக்க மேலும் விவரங்களைத் திரட்டுகின்ருேம். பலதடவை இவ்வாறு செய்யுங்கால் முதற்கொள்கை நீக்கப்பெற்று வேருெரு கொள்கையும் தோற்றுவிக்கப் பெறுகின்றது; அதனையும் இவ்வாறே ஆராய்கின்ருேம். முடிவுகளைப் புறவயமுறையில் சோதித்துத் திருத்துதல் : நாம் சிந்தித்துக்கண்ட முடிவுகளைச் சோதிக்க வேண்டியதன் அவசி யத்தை உணர்கின்ருேம். அவை கொடுக்கப்பெற்ற நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்; அவை நன்கு கிறுவப்பெற்ற உண்மைகளு டன் முரண்படாதிருத்தல் வேண்டும். சிறுவர்கட்கு இங்கில தொல்லை தருவதாக இருக்கும். அவர்கள் அம்முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று விழைவர். ஆசிரியர்கள் அவர்களை எச்சரிக் கையுடன் செல்லப் பயிற்றவேண்டும். ஆய்தல் ஆய்தல்" என்பது வாதம்", செய்துகாட்டல்", மெய்ப்பித்தல்87 ஆகியவற்றில் பயன்படும் ஒருமனச் செயல்; அது குறியீட்டுகிலேயில் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பது. பிரச்சினை இல்லாவிட்டால் ஆய்தல் ஏற் படாது. முன் அனுபவத்திலில்லாத ஒரு செயல் நேரிட்டால்தான் மனிதன் காரணங்காட்ட முயலுகின்ருன். அல்லது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே முன் அனுபவங்கள் திரும்பவும் அல்லது புதிதாக அமைக்கப்பெற்று ஆய்தல் நடைபெறுகின்றது. ஆய்தலின் புதிதான கூறு தெரிந்த அனுபவங்களிலிருந்து ஒரு முடிவினை அடைதல். இதனை உய்த்துணர்தல்" என்று வழங்குவர். s2.sgsgars - hypothesis. soupaju gropás - objectively. 843; digs' - reasoning. 8 5 வாதம் - argument, 88செய்து காட்டல் - demonstration. 87Qibiliūššć - proof. 882 is 5gisori; ;) - inference.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/276&oldid=778096" இலிருந்து மீள்விக்கப்பட்டது