பக்கம்:கல்வி உளவியல்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கல்வி உளவியல் தீர்க்கும் எடுகோள்களை நாடுதல்; (3) எடுகோள்களை ஒப்பிட்டு மதிப்பிடு தல் , (4) பாகுபாடு செய்தல்' , (5) பொதுநிலைப்படுத்தி முடிவுக்கு வருதல். பகுத்தறிமுறையில் நாம் காணும் படிகள் : (1) பிரச்சினையை அறிதல் ; (2) முக்கியமான கூறுகளைப் பாகுபாடு செய்து பொதுமைப் படுத்துதல் ; (3) பொதுமைகளைக்கொண்ட எடுகோள்களை நாடுதல் ; (4) ஒவ்வொரு எடுகோளையும் ஒப்பிட்டு மதிப்பிடல் : (5) முடிவு காணுதல். பயிற்றலில் : சாதாரணமாகக் குழந்தைகள் தொகுத்தறிமுறை ஆய்தலேயே எளிதில் உணர்கின்றனர். ஏனெனில், அதில் காட்சிப் பொருள்களைக் கொண்டே ஆய்தல் தொடங்குகின்றது. பகுத்தறிமுறை யில் கருத்துப்பொருள்களிலிருந்து ஆய்தல் தொடங்கவேண்டியிருத் தலின், அஃது அவர்கட்கு அவ்வளவு எளிதன்று. முன்னதே சிறுவர் கட்கு ஏற்றது ; தாமாகவே விதிகளைக் கண்டறிவதில் சிறுவர்கட்கு ஆர்வம் அதிகம். மேலும், அவர்களே கண்டவற்றை அவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். சிறு குழந்தைகளும் ஆய்தல் நடத்துகின்றன. சில பொருள்களை ஆய்வதில் கண்ட உண்மைகளை பிறபொருள்கட்குப் பயன்படுத்துகின்றன. எனவே, கல்வியில் எல்லா நிலைகளிலும் உண்மைகளை அறிவதையும், அவ்வுண்மைகளிலிருந்து ஆய்தலையும் கடைப்பிடிக்கவேண்டும். நினைவு இன்றைய உளவியலார் கற்றல் மூளையில் மாற்றங்களை உண்டாக்கு கின்றது என்று கூறுகின்றனர். இம்மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இருத்தப்பெறுகின்றன ; அவை தனியாளின் நடத்தை மூலம் வெளிப்படுகின்றன. இந்நடத்தைதான் நினைவு 4 என்பது. அ.தாவது மனம் தன்னுடைய செயலால் கருத்துக்களைப் பதிந்து, இருத்தி, திரும்ப வும் தேவையான பொழுது வெளியிடுவதையே நினைவு’ என்ற சொல்லால் குறிக்கின்ருேம், சாயல்கள்' மூலம்தான் அனுபவங்கள் மனத்தில் சேமிக்கப்பெறுகின்றன. கிச்சிலிப்பழம் எப்படியிருந்தது என்பதை நினைவில் வைக்கவேண்டுமானல், அதன் மஞ்சள் போன்ற நிறம், உருண் டைவடிவம், தொளைகள் உள்ள தோல், ஊற்றுணர்ச்சி, மணம், சுவை ஆகியவை மனத்திற்கு வருகின்றன. இவ்வாறு கிச்சிலிப்பழம் என்ற கருத்தினைப் பெறுகின்ருேம். இதனை உண்மைக் கிச்சிலிப்பழத்துடன் 9 $uir gur@ - analysiS. o 4 #]&rey - mēmory. 9 5štru&) - image.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/278&oldid=778100" இலிருந்து மீள்விக்கப்பட்டது