பக்கம்:கல்வி உளவியல்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 267 மொத்த (identical) இரண்டு பால் பெட்டிகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்பொழுது அவற்றில் தன் கவனம் ஈர்க்கப்பெறுகின்றது. இதற்கு முன்பு அக்குழந்தை ஒரே பெட்டியைத் தான் பார்த்திருந்தது. இரண்டு பெட்டிகளின் காட்சி அதற்கு ஒரு புதிய அனுபவம். இரண்டு பெட்டி கள்’ என்று அவற்றை அறிந்ததிலிருந்து குழந்தை ஒரே மாதிரியான இரண்டு பொருள்களைக் காண்பதில் விருப்பங்கொள்ளுகின்றது. இரண்டு கத்திகள், இரண்டு தட்டுகள், இரண்டு சிறு வண்டிகள் ஆகியவற். றைக் காணும்பொழுது மகிழ்ச்சி கொள்ளுகின்றது. அதற்கு அடுத்த கிலே இரண்டு ஒப்புமையான (similar) பொருள்களைக் காணுதல்; ஒரு தேக் கரண்டி, ஒரு மேசைக் கரண்டி, ஒரு பூவன் பழம், ஒரு மலைப்பழம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுக்களாகக் கொள்ளலாம். இதற்கும் அடுத்த கிலை வேறு பாடான (dissimilar) பொருள்களைக் காணுதல்; ஒரு பேளுவும் ஒரு பென்சிலும், ஒரு பம்பரமும் ஓர் ஊதுகுழலும் ஆகியவை இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாகும். இவ்வாறு பல்வேறு விதமாகத் திரும்பத் திரும்பக் கூறுவதில் இரண்டாம்-தன்மை (two-ness) பற்றிய எண்ணம் மெதுவாகத்தலைகாட்டுகின்றது. வரவரப்பொருள்களின் இயைபுகள் மறைந்து குழந்தை இரண்டு என்ற சொல்லை ஆளத் தொடங்குகின்றது; பிறகு 2 என்ற குறியீடு இதன் இடத்தைப் பெறு கின்றது. குழந்தையின் இரண்டு என்பது பற்றிய எண்ணம் 6-4=2; க் x4= 2; 4x8=2 என்பன போன்ற கணக்கிடும் அனுபவங்களால் பின்னும் வலியுறுகின்றது. இது வெற்றுணர்வு. ஒற்றுமை வேற்றுமைகளை உற்று நோக்கி ஒப்பிட்டுப் பார்த்து உணர் வதால் பொது உணர்வு உண்டாகின்றது. குழந்தைக்குத் தொடக்கத்தில் கிடைக்கும் பொதுஉணர்வு தின்பண்டம் ஆகும். குழந்தை பேசும் ஆற்றல் கைவரப் பெறுவதற்கு முன்னரே ரொட்டி, வாழைப்பழம், மிட்டாய் முதலியவற்றைக் கண்டால் கைகளை நீட்டுகின்றது. இதிலிருந்து பொருள்களை கிதானித்து அறியும் ஆற்றல் அதற்கு வந்து விட்டது என்று கொள்ளலாம். இது தின்பண்டம் என்பது ஒரு துணிவு ஆகும். விரைவில் குழந்தை படுக்கை, கரண்டி, தட்டு, பால், சருக்கரை போன்ற பல பொதுவான எண்ணங்களையும் பெற்றுவிடுகின் றது. இம்மாதிரியான பொது எண்ணங்களே மொழி உருவத்தை அடை கின்றன. எனவே, மொழி கற்பதில் பொது உணர்வுக் கருத்துக்களின் வளர்ச்சிக்கு நாம் துணை செய்கின் ருேம், பட்டறிவையொட்டிய சொற். களைக் கற்பிப்பதால்தான் பயன் காண முடியும் பட்டறிவுக்கப்பாற். 12 9 5 of so - judgment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/289&oldid=778123" இலிருந்து மீள்விக்கப்பட்டது