பக்கம்:கல்வி உளவியல்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 கல்வி உளவியல் கிருர் முதன் முதலில் அவற்றை இயக்குகிறவர் நாளடைவில் பழக்கத் தால்தான் அங்கிலேயை எய்துகின்ருர். (4) விரைவு அடைதல்: பழக்கப்பட்டதை நாம் விரைவாகச் செய்து முடிக்கின்ருேம் பழக்கம் விரைவைக் கொடுத்துக் காலத்தை யும் மீதிப்படுத்துகின்றது. பாடத் தொடங்கும்போதெல்லாம் சுர இடங்களைத் தேடிக் கொண்டிருந்தால் இசை ஏற்படுவது எங்ங்ணம்? (5) உழைப்புக் குறைதல் : பழக்கத் தொழில் உழைப்பைக் குறைக்கின்றது. (எ-டு) ஆடையணிதல், தலவாருதல், எழுதுதல், மிதி வண்டி ஏறிச் செல்லுதல் போன்றவை முதலில் கவலையுடனும் கவனத் துடனும் செய்யப்பெற்றன. நாளடைவில் அவற்றைச் செய்வதாகவே உணர்வதில்லை; அவ்வளவு எளிதாக அவை நடைபெறுகின்றன. (6) உயர்வினைகளியற்றும் வாய்ப்பு : பழக்க அமைப்பால் பல செயல்களை ஒரே சமயத்தில் கிறைவேற்றலாம். அன்ருட வாழ்க்கைக்குத் தேவையான சில்லறைச் செயல்கள் பொறியியக்கம்போல் தன்வயமாக நிகழ்வதால், உயர்வெண்ண ஆற்றலும் அறிதிறனும் உயர்நிலைப் பொருத் தப்பாட்டிற்கும் முயற்சிகளுக்கும் பயன்படுகின்றன. நூற்கும்போதே காம் பேசுகின்ருேம் ; சிந்திக்கின்ளுேம். நூற்றலால் ஒருவரது சிந்தனை வளர்கின்றது என்று காந்தியடிகள் கூறியதை இவ்விடத்தில் எண்ணி மகிழ்க. பெருக்கல் வாய்ப்பாடு, இலக்கண விதிகள், சரியாக எழுத்துக் கூட்டல், வரலாற்று உண்மைகள், அறிவியல் விதிகள் போன்றவற்றைப் பழக்கத்தால் மனப்பாடம் செய்துவிட்டால் நம் சிந்தனை புதிய துறைகளில் ஈடுபடலாம். அiப்படையான அறிவும், அடிப்படையான திறன்களும் பழக்கங்களாக வேண்டும். கல்வித்துறையில் பன்முறைப் பயிற்சிக்கு’**இடந்தர வேண்டும். இளமையே பழக்கங்கள் ஏற்படு வதற்கு ஏற்ற காலம். 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பது பழமொழியன் ருே ? இளமைப் பருவம் இளக்கமுடையதாதலாலும், கொடுத்த உருவத்தை ஏற்றுக் கொள்ளுமாதலாலும், முதற்கோணல் முற்றிலும் கோணலாதலாலும் இளமையிலேயே நற்பழக்கங்களை ஏற் படுத்த வேண்டும். பழக்கம் அமைதல் பழக்கங்கள் எவ்வாறு அமைகின்றன? சிறுவர்களிடம் கற்பழக்கங்களை வளர்ப்பதற்கு நாம் செய்ய வேண்டுவ தென்ன ? இவற்றைச் சிறிது ஆராய்வோம். 2.82 பன்முறைப் பயிற்சி - drill.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/292&oldid=778131" இலிருந்து மீள்விக்கப்பட்டது