பக்கம்:கல்வி உளவியல்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 277 ஐன்ஸ்டைனும் கியூட்டனின் கருத்துக்கனைப் பின்பற்றியே தன்னுடைய ஒப்புநோக்குக் கொள்கையை வளர்த்தார்: கலிலியோவைப் பின்பற்றியே கியூட்டன் அறிவு வளர்ச்சியினைப் பெற்ருர். சுய-வெளியீட்டிற்குப்’** பின்பற்றல் ஒன்றுதான் சிறந்த வழியாகும். இதனை ஆசிரியர்கள் மாளுக்கர்களிடம் தக்க முறையில் வளர்த்தல் அவர்களின் கற்றலுக்குப் பெருந்துணை புரிவதாகும். கருத்தேற்றம் உணர்ச்சியை மிகுதியாகத் தூண்டுவதன் காரணமாகச் சிந்தித்துப் பார்க்காமலேயே பிறர் கூறும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கிலையைக் கருத்தேற்றம் ' என வழங்குவர். எவ்வளவுக்கெவ்வளவு பிறர் கூறும் யோசனைகளை ஒருவன் ஒப்புக்கொள்ளுகின்ருனே அவ்வளவுக் கவ்வளவு கருத்தேற்றம் அமுலுக்கு வருகின்றது. ஆய்தல் திறன் அற்றிருக்கும்பொழுதே இங்ங்னம் ஒப்புக்கொள்ளுதல் நிகழ்கின்றது. (எ-டு) களைப்புடனிருக்கும்பொழுது இஃது ஏற்படுகின்றது. இஃது எளிதில் ஏற்படுவதற்குச் சில தத்துவங்கள் உள. அவை: (1) இஃது அறிவைக் கிளருமல் உணர்ச்சியைக் கிளறுதல்; (ii) இதை ஆராயாமலேயே மனம் ஏற்றுக் கொள்ளுதல்; (iii) திரும்பத்திரும்ப ஏற்படுதல் என்பவை. எனவே, கருத்தேற்றத்தின் ஆற்றல் கனவிலி உளத்தையே பொறுத்தது; அறிவைப் பொறுத்ததன்று. இத்தகைய தூண்டல் எப்பொழுதும் ஒரே ஆற்றலுடையதாக இராது. தூண்டல் ஏற்கும் சமயத்தையும் தூண்டப்பெறுபவர் உளநிலையையும் பொறுத்து அது வேறுபடும். தூண்டப்பெறுபவர்கட்குத் தூண்டலை உண்டாக்கு பவரிடம் ஏற்படும் அச்சம், நம்பிக்கை அல்லது அன்புபோன்றவையே கருத்தேற்றம் ஏற்படுவதற்குக் காரணங்களாகும். விளம்பரம் செய்வோர் கருத்தேற்றத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். ஏதேனும் ஒரு பொருள் விற்பனைக்கு வந்ததும் வணிகர்கள் அதைக் குறித்த விளம்பரங்களை மக்கள் திரளாகக் கூடுமிடங்களிலெல்லாம் ஏராளமாக ஒட்டுகின்றனர்; அதைப்பற்றிய துண்டுப் பிரசுரங்களை வழங்குகின்றனர். அவை இலட்சக் கணக்கான பத்திரிகைப் பிரதிகளிலும் அச்சாகின்றன. அதை நாம் காடோறும் பார்க்கின் ருேம். ஆயிரக்கணக்கான முறை பார்ப்பதால் அது நம்முடைய மனத்தில் கன்கு பதிந்து விடுகின்றது. நாம் என்றே 145 goal-Qassiftić, - self-expression. 148 &@#G#figh - suggestion.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/299&oldid=778145" இலிருந்து மீள்விக்கப்பட்டது