பக்கம்:கல்வி உளவியல்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கல்வி உளவியல் தேர்ச்சி பெற்றவர் பந்தடியாட்டத்தின் சேமென்மையான அடிகளைக் கையாள முடிவதில்லை. ஒரு துறையில் பெற்ற பயிற்சி பிறிதொரு துறைக்கு இடையூருக முடியலாம். (4) பயிற்சி மாற்றம் பொருளொப்புமையாலும், யுக்தி முறைகள் ஒப்புமையாலும் விதிகளொப்புமையாலும் அல்லது இவற்றின் தொகுதி யாலும் ஏற்படுகின்றது. ஆகவே, ஆசிரியர் கற்பிக்கும் செய்திகளுடன் முறைகளையும் உண்மைகளையும் வலியுறுத்திக் கற்பிக்க வேண்டும். (5) நுட்பமாகக் கற்போர் தன் உள்ளுணர்வைக் (intuition) கொண்டு சிறந்த பயிற்சி மாற்றத்தை அடைவர். நம் அனுபவத்தில் பல எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். (6) மனப்பயிற்சி தருகிறதாக எண்ணி எப்பாடத்தையும் கல்வி ஏற்பாட்டில் சேர்ப்பது தவறு. பாடத்தின் தனிப்பயனைக் கருதியே அதனைச் சேர்க்க வேண்டும். (7) பயிற்சி மாற்றத்திலும் தனியாள் வேற்றுமைகள் உண்டு. இதை உணர்தல் அவசியம்.

  • பந்தடியாட்டம் tennis,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/304&oldid=778158" இலிருந்து மீள்விக்கப்பட்டது