பக்கம்:கல்வி உளவியல்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 295 களிலுமே கிலவுகின்றது. இதில் சிறிதும் உண்மை இருப்பதாகத் தோன்ற வில்லை. அதாவது, பெருவாரியான ஆண் பெண்களின் அறிதிறன் ஈவு களைக் கண்டறிந்து ஒவ்வொரு பாலாருக்கும் சராசரி கண்டு பிடித்தால், அதிகவேறுபாடு இராது. ஆயினும், ஆண் மக்களிடையே பெண் மக்க ளிடையே இருப்பதைவிட அறிதிறன் மிக்குடையோர் அதிகமான எண் ணிக்கையிருப்பர் ; அங்ங்னமே அறிதிறன் மிகக் குறைவுடையோரும் ஆண்பாலாரிடையே அதிகமாகக் காணப்படுகின்றனர். அறிதிறன்பற் றிய சோதனைகளால் அறிதிறன் வேற்றுமை அதிகமாக இல்லை என்று தெரிகின்றது: பொதுவாகப் பெண்கள் மொழிபற்றிய சோதனைகளில் அதிகத் திறனையும் ஆண்கள் கணிதம், பொறிநுட்பம்பற்றிய சோதனை களில் அதிகத் திறனையும் காட்டுகின்றனர். அறிதிறனும் உடல் நலனும் : மதிநுட்பம் மிக்கோர் உடல்நலம் குன்றியவர்களாக இருப்பர் என்பதுவும் உடல்வன்மைமிக்குள்ளோரிடம் அறிவு சற்றுக் குறைந்தே காணப்படும் என்பதுவும் பொதுமக்கள் கருத்து. இயற்கை ஒருவருக்கு அறிதிறனும், இன்ைெருவருக்கு உடல்திறனும் அளித்து சமநிலையை நிலவச்செய்கின்றது என்று அவர்கள் கருத விரும்பு கின்றனர். ஆராய்ச்சியின் மூலம் இக்கொள்கை தவறுடைத்து என்று கண்டறியப் பெற்றுள்ளது. அறிதிறனும் ஊட்டமும் : ஊட்டம்’ எவ்வாறு அறிதிறனைப் பாதிக் கின்றது? இத்தொடர்பை ஆராயுங்கால் சோதனையில் மாறும் கூறுகளெல் லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, எளிய குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகள் ஊட்டக் குறைவால் வாடுவ்துடன் அறிதிறனிலும் உடல்வளமுள்ள பிள்ளைகளி னின்றும் குறைந்தே காணப்படுகின்றனர். இதனுல் ஊட்டக் குறைவு அறிவுக் குறைவுக்குக் காரணம் என்று முடிவு கட்டிவிடமுடியாது. இக் குறைவு ஊட்டக் குறைவால் மாத்திரம் நிகழ்ந்திருக்கும் எனக்கூற முடி யாது ; குடிவழியின் காரணமாகவும், குடும்பச்சூழ்நிலையாலும் இஃது ஏற்பட்டிருக்கலாம். இதனைச் சரியாக ஆராய விரும்பியவர்கள் முதலில் பட்டினியால் வாடிய பல குழவிகளின் அறிதிறனை ஆராய்ந்தனர். பிறகு அவர்கட்கு நல்ல ஊட்ட உணவு அளித்து, அறிதிறன் வளர்ச்சி வேகம் அதிகரிக் கின்றதா என்று கவனித்தனர். அஃது அங்ங்ணம் அதிகரிக்கவில்லை என் பது தெரிந்தது. உணவுக் குறையை நீக்குவதால், குழந்தை சுறுசுறுப்புத் 27 as I.Ltd - nutrition.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/317&oldid=778188" இலிருந்து மீள்விக்கப்பட்டது