பக்கம்:கல்வி உளவியல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் # , புலன் எல்லைக்குள்ளடங்கிய, எல்லாப் பொருள்களும் விசைகளும் அடங் கிய ஓர் அமைப்பே சூழ்நிலை என்பது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஊன்றி நோக்கினுல், அவ ரவர் தமக்கு அமைந்துள்ள சூழ்நிலையோடு ஓயாமல் ஊடாடிக் கொடுக்கல்வாங்கல் செய்துகொண்டிருப்பது புலனுகும். இக் கொடுக்கல்வாங்கலே பொருத்தப்பாடு என்பது ; அஃதாவது இயன்றவரை கன்னிலைக்கு மாறுதல். சிலசமயம் தனியாள் சூழ்நிலையை யொட்டித் தன்னைப் பொருத்திக் கொள்கின்ருன். (எ-டு) ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற் குச் செல்லுதல் ; ஒரு தொற்றுநோய்க்கு ஒரு தடையை (immunity) ஏற்படுத்திக் கொள்ளுதல். சில சமயம் அவன் தனக்கேற்ருற்போல் சூழ்நிலையை மாற்றியமைக்கின்றன். (எ.டு.) ஒரு பொருளைத் தனக்கு அப்பால் தள்ளுதல் அல்லது அப்பொருளைத் தன்னை நோக்கி இழுத்தல் ; தான் வாழும் அறையை நுண்ணிய நோய்ப்புழுக்களழியுமாறு (sterilize) செய்து கொள்ளுதல். தன்னை மாற்றிக்கொள்ளுவதிலும் சூழ்கிலேயை மாற்றியமைத்துக்கொள்வதிலும் அவன் தனக்கும் சூழ்நிலைக்கும் இடை யிலுள்ள தொடர்பை மாற்றுகின்றன். X சில சமயம் தனியாள் சூழ்நிலைக்கேற்பத் தன்னைப் பொருத்திக் கொள்ளுகின்றன் என்போம்; சில சமயம் சூழ்நிலையைத் தனக்கேற்றவாறு பொருத்துகின்ருன் என்று கூறுவோம். ஒன்றில் அவன் விட்டுக்கொடுக் கின்ருன் , மற்றென்றில் ஆட்சி செலுத்துகின்ருன். தான் ஓர் ஊர்தியில் செல்லுங்கால் வழியில் ஒரு பாருங்கல் இருந்தால், அதனை விலகிச் சென்று தன்னைப் பொருத்திக்கொள்ளுகின்றன் ; அல்லது அக் கல்லை அகற்றி விட்டு ஊர்தியைச் செலுத்துகின்றன். இரண்டு நண்பர்கள் தாம் செய்யவேண்டியதைப்பற்றி மாறுபட்ட கருத்துடையவர்களாக இருந்தால், விட்டுக் கொடுக்கும் இயல்புள்ளவர் மற்றவரின் விருப்பத்திற் கேற்றவாறு தம்முடைய திட்டங்களை மாற்றிக் கொள்ள முயலுகிருர் ; ஆக்கிரமிக்கும் இயல்புள்ளவர் இவரைத் தம் திட்டத்தை மேற்கொள்ளும் படி செய்துவிடுகின்ருர், இருவரும் பொருத்தப்பாடு அடையும் செயலில் இறங்கி யிருக்கின்றனர். இவ்வாறு தனியாளும் சூழ்நிலையும் இடையருது இடைவினை இயற். றும் செயலை அடியிற்காணும் வாய்பாடுகளால் உணர்த்தலாம். ما جس– سوة جسس ما (i) (ii) 0نا چست۔ ۔ صلى الله عليه وسلم -< g_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/32&oldid=778194" இலிருந்து மீள்விக்கப்பட்டது