பக்கம்:கல்வி உளவியல்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 299; ஒப்பிட்டுத் தொடர்பு கொள்ளலாம். தவருன சில அளவைகளை நீக்கி உண்மையான பொதுமையை அறியப் புள்ளி விவர முறைகள் பெரிதும் துணை செய்கின்றன. மனத்தின் சிறப்பியல்புகளின் கோலங்கள் அன்ருட உற்று நோக்கலாலும் உளவியல் சோதனைகளாலும் தனியாட்களிடையே சூழ்நிலையாலும் குடிவழியிாலும் ஏற்பட்ட வேற்றுமை கள் மிக அதிகமானவையென்றும், அவை அளத்தற்கு அரியவை என்றும் அறிகின்ருேம். இத்தகைய வேற்றுமைச் சிக்கல்களின் காரணமாகவே உளவியல் அறிஞர்களும் பிறரும் இவற்றுள் சில மனத்தின் சிறப் பியல்புக் கோலங்களைக் காண முயன்றனர். அஃதாவது மக் களுக்குள் ஒற்றுமை வேற்றுமைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பகுத்து உணர வழி வகைகளை ஆய்ந்தனர். இங்கு அத்தகைய கோலங் களைப்பற்றிப் பொதுமக்கள் கருத்தும் புறவய அளவுகளும் என்ன கூறு கின்றன என்பதைக் காண்போம். வகைகள் என்னும் பண்டைய இரு மையக் கொள்கைள் : பொதுமக்களிடையே இக்கொள்கை அதிகச் செல்வாக்குப் பெற்றுப் பரவியுள்ளது. இக்கொள்கைப்படி ஏதாவது ஒரு பண்பை அடிப்படை யாகக் கொண்டு மக்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். உழைப் பவன் சோம்பேறி என்றும், அகமுகர் புறமுகர் என்றும் மக்களைப் பிரித்து இந்த இரண்டு கோடிகளுக்குமிடையே இடைகிலேகள் அமையாதன போல் மக்கள் கருதுவர். இஃது உண்மையாக இருக்குமாயின், இக்கூறின அளந்து ஒரு வரைப்படம்* இயற்றினல் அதில் இரு ஏற்றங்கள் காணப் பெறல் வேண்டும். இத்தகைய ஏற்றம் ஒரு மதிப்பெண் பெறும் மக்களிட் டத்தைக் காட்டுகின்றது. வரைப்படத்தின் இரண்டு பக்கங்களில் இரு ஏற் றங்கள் காணப்பெற்ருல் ஒரு தன்மையை இரண்டு தொகுதியாக அல்லது வகையாகக் காணலாம். ஆனல், உண்மையில் நாம் காண்பது ஒரு வளைகோடு; மணிசாடி உருவத்தைப் போன்றது , நடுவில் ஒரே ஏற்ற மும் இரு பக்கங்களிலும் தாழ்வுமானது. இதிலிருந்து நாம் பெறும் முடிவு என்ன? பெரும்பாலான மக்கள் சமநிலை அல்லது சராசரி நிலையிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களே அகநிலை, புறநிலை உடைய வர்கள் என்பதையும் அறிகின்ருேம். s2 Gärsoč - pattern. 88 alongsiut–tb - graph.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/321&oldid=778198" இலிருந்து மீள்விக்கப்பட்டது