பக்கம்:கல்வி உளவியல்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கல்வி உளவியல் கும் ஏற்ப இவற்றை முடித்துக் கொள்ளலாம். திறமை மிக்கவர்கள் பாடத்துள் ஆழமாகச் சென்று அதிகமான திட்டங்களை நிறைவேற்று கின்றனர். பிறர் அடிப்படைத் திறன்களேயாவது கற்கின்றனர். திறமை மிக்கவர்கள் மெதுவாகக் கற்போருக்குத் துணைசெய்கின்றனர். ஆசி ரியரும் பலவகையில் இவர்கள் துணையைப் பெறுகின்ருர். தற்காலக் கல்வி முறைகளாகிய டால்ட்டன் திட்டம், தன்ளுேக்க முயற்சி முறை ஆகியவற்றில் தனியாள் வேற்றுமைகளுக் கேற்றவாறு கற்கும் வாய்ப்புக்கள் அமைந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/326&oldid=778208" இலிருந்து மீள்விக்கப்பட்டது