பக்கம்:கல்வி உளவியல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 கல்வி உளவியல் இவற்றில் ம என்பது மனிதனையும் உ என்பது உலகத்தையும் குறிக் கின்றன. முதலாவது : “ மனிதன் உலகத்தைத் தாக்குகின்ருன் ; உலகம் திரும்பூமனிதனைத் தாக்குகின்றது” என்பதை உணர்த்துகின்றது. இரண் டாவது : “உலகம் மனிதனைத் தாக்குகின்றது; மனிதன் திரும்ப உலகத் தைத் தாக்குகின்ருன் ” என்பதை விளக்குகின்றது. கல்வி உளவியல் குழந்தையின் பட்டறிவு, செயல்கள் ஆகியவற்றைக் கொண்டு அவனைச் சூழ்நிலைக்கேற்றவாறு பொருத்தமுறச்செய்வதில் துணை கிற்கின்றது. உளவியலால் ஆசிரியருக்குப் பயன் : உளவியலைக் கற்றல் ஆசிரி யருக்கு எப்படி இன்றியமையாததாகின்றது? இதைச் சிறிது ஆராய்வோம். ஒரு காலத்தில் ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பொருளைமட்டிலும் நன்கு அறிந்தால் போதும் என்ற கருத்து நிலவியது. ஆனால், சிறிது காலமாக அதுமுட்டிலும் போதாதென்று கருதப்பெறுகின்றது. பயில்விக்கும் மாளுக் கணியும் அறியவேண்டியது மிக இன்றியமையாதது என்று பல கல்வி நிபு ணர்கள் கூறிவருகின்றனர். ஆசிரியர் பரந்தாமனுக்குப் பைந்தமிழைப் பயில்வித்தார்’-இந்தச் சொற்ருெடரில் பயில்வித்தல் என்ற வினை பரந் தாமனையும் தழுவி நிற்கின்றது; பைந்தமிழையும் தழுவி நிற்கின்றது. காண்க. ஆசிரியர் பைந்தமிழையும் அறிந்திருத்தல் வேண்டும்; பரந்தாமனே யும் அறிந்தவராய் இருத்தல் வேண்டும். பரந்தாமனை அறிதல்தான் உளவியல்; இந்த உளவியல் ஆசிரியருக்கு மிகவும் இன்றி யமையாதது. பண்டைய ஆசிரியர் பைந்தமிழுக்கு அழுத்தம் தந்தனர். இன்றைய ஆசிரியர் பரந்தாமனுக்கு அழுத்தம் தருகின்றனர். ஆகவே, ஸ்விட்ஸர்லாந்து நாட்டு உளவியலறிஞர் பெஸ்டலாலி' என்பார் கல்விக்கலையை உளவியல் மயமாக்கு’ என்று கூறிப்போந்தார். எனவே, உள வியல் ஆசிரியருக்கு மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படு கின்றது. இந்த உளவியலறிவு ஆசிரியருக்கு எத்துணை அளவு பயன்படு கின்றது? மூன்று துறைகளில் இவ்வறிவு ஆசிரியருக்குப் பயன்படலாம். முதலாவது : தாம் கற்பிக்கும் மாளுக்கர்களை நன்கு அறிந்து கொள் ளுதல். பள்ளி, மாளுக்கர்களுக்கென்றே ஏற்பட்டிருக்கின்றது; மானுக்கர் களின் கலனுக்கென்றே ஆசிரியர் கியமிக்கப் பெற்றிருக்கின்ருர். மாளுக் கர்களை இருமுறைகளால் அறிந்துகொள்ளலாம். ஒன்று, அவர்களைத் தனியாள்களாக அறிதல், இரண்டு, குழுவாக அறிதல். எந்த இரண்டு மாளுக்கர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு 35 GusioLeom Erstl–Pestalozzi.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/33&oldid=778215" இலிருந்து மீள்விக்கப்பட்டது