பக்கம்:கல்வி உளவியல்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கல்வி உளவியல் லுள்ள வில்லை இறுகுவதால் இக்குறை தோன்றுகின்றது. தகுந்த குவி வில்லைகளைக் கொண்டு இக்குறையைச் சமாளிக்கலாம். 2. குழல் பார்வை : ஒவ்வொருவருடைய கண்ணிலும் பார்வை நரம்பு கட்புலப்படாமோடு ஒன்று சேருமிடத்தில் ஒரு குருட்டுப் புள்ளி அமைந்துள்ளது. இஃது எப்போதும் இருந்து வருவதாலும், இதன் துணை யின் றியே மற்ற கண் திரைப்பகுதிகள் காட்சித் தொழிலை கன்கு நடத்தி வருவதாலும் நாம் இதனைப்பற்றி அதிகமாக உணர்வதில்லை. ஆனல், மதுபானம், புகையிலையை அதிகமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றலும் அதிகமான ஒளியைப் பார்ப்பதாலும் தற்காலிகமானவையும் கிலேயான வையுமான பல குருட்டுப் புள்ளிகள் உண்டாகின்றன. இவை பார்வை யைப் பெரிதும் பாதிக்கின்றன. குழற் பார்வை சில பொது நோய்களாலும் பார்வை நரம்புப் பாதையின் தடையாலும் நேரிடுகின்றது. குழற்காட்சியால் காட்சிப் பரப்பு குறைந்துகொண்டே வந்து வெளி யுலகம் ஒரு குழல் மூலம் பார்க்கப் பெறுவதுபோல் தோன்றுகின்றது. சூழ் நிலையின் பல பகுதிகளையும் பார்க்க வேண்டுமாயின், நாம் அதிகமான தலையசைவுகளையும் கண்ணசைவுகளையும் இயற்றவேண்டும். இது தொலை நோக்காடியில் ஒருவன் வானத்தை அளக்க அதனைப் பன்முறை திருப்புவது போலாகும். பண்டைக் காலத்தில் இக்குழற் காட்சி ஒரு வகை மனக்கோளாறில்ை உண்டாகின்றது என்று கருதினர். இன்று அது பலகாரணங்களால் நிகழ்கின்றது என்று கண்டறியப்பெற்றிருக்கின்றது. காதின் குறைபாடுகள் : காரணமும் அறிகுறிகளும் காதின் அமைப்பைப் பற்றியும்; கேள்விப் புலன் எவ்வாறு செயற்படு கின்றது என்பதையும் முன்னர் கண்டோம். இங்கு காதின் குறைபாடுகளை யும், அவற்றின் காரணத்தையும், அவை தோன்றும் அறிகுறிகளையும் சிறிது ஆராய்வோம். - கேள்விப் புலன் சரிவரச் செயற்படாத பேர்வழிகளைச் செவிடர்கள் என்கின் ருேம். அன்ருட வாழ்க்கைக்குச் செவிடு ஒருபெருங்குறையாகும். மக்களோடுள்ள பேச்சுத் தொடர்பின்றி குருடர்களைக் காட்டிலும் செவிடர்களே அதிகமாக விலக்கப்பெற்றுள்ளனர். நெடுநாள் செவிடு காரணமாக இவர்கள் பேசும் ஆற்றலையும் இழக்கின்றனர். ஆனல் முற்றுச் செவிடர் மிகக் குறைந்த பேர்களே ஒலியலைவுகளைப் பெருக்கு வதன்மூலம் குறைச் செவிடர்களைக் கேட்கச் செய்துவிடலாம். செவி மந்தமுள்ளவர்கள் இரு வகைப்படுவர். 5 &géðurføsu - tunnel vision.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/330&oldid=778216" இலிருந்து மீள்விக்கப்பட்டது