பக்கம்:கல்வி உளவியல்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கல்வி உளவியல் கொப்புளம் இருப்பினும் காது கேட்கும். கிளிசரினில் எப்சம் உப்பைக் கரைத்து அக்கரைசலில் வலைத் துணித் திரியை கனத்துச் செவிக்குழலில் அத்திரியைக் கொப்புளத்திற் கப்புறம்வரை செலுத்த வேண்டும், நாள் தோறும் அத்திரியை அகற்றிப் புதியதைச் செருக வேண்டும். இதல்ை கோப்புளம் ஆறிவிடும். இடைச் செவியில் உண்டாகும் நோய்கள் சீழற்றவை, சீழுடையவை என இருவகைப்படும். சீழுடையவை ஏற்படின் செவிப்பறை கிழிய நேரிடும்; சீழ்வடியும். வலியும் செவிட்டுத் தன்மையும் உண்டாகும். குணப்படுத்தாதிருந்துவிட்டால் மாஸ்ட்டாய்டு எலும்பில் நோய், முகநரம்பு வேலை செய்யாமை போன்ற பல நோய்கள் உண்டாகும். காதொழுக்கு ஏற்பட்டால் மருத்துவரிடம் காட்டி உடனே சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். உட்செவி சம்பந்தமான நோய்கள் சாதாரணமாகக் குழந்தைகளிட மும் சிறுவர்களிடமும் உண்டாவதில்லை. காதுநோய்களின் முக்கிய அறிகுறிகள் காதில் இரைச்சல் உண்டா வதும், காது கேளாதிருப்பதும், மயக்கம் உண்டாவதும், வலியும் சீழும் உண்டாவதுமாகும். காதின் எப்பகுதியில் நோய் ஏற்பட்டாலும் காது கேளாமை நிகழலாம்; இரைச்சலும் உண்டாகலாம். சீழ் உண்டாவது இடைச் செவியிலேயே. உட்செவி நோய் உண்டானல் மயக்கம் தோன்றும். காது வலி ஏற்பட்டால் கவனமாகச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சிறு குழந்தைகட்குப் பல் முளைக்கும்போது காது வலி உண் டாகலாம்; அல்லது குழந்தை ஏதேனும் சிறிய பொருளைக் காதினுள் இட்டு விடலாம். மூக்கிலோ தொண்டையிலோ கலக்குறைவு ஏற்படுவ தாலும் காது வலி உண்டாகலாம். காது நோய்களைத் தொடக்கத்தி லேயே கவனியாமல் விட்டு விட்டால் கர்து செவிடாகிவிடக் கூடும். பற்களின் குறைகள் : காரணமும் அறிகுறிகளும் செரிமான மண்டலத்தின் முன்வாயிலாகிய வாயில் நுழைவாயில் காவலர்கள் (துவார பாலகர்கள்) போல் அமைந்திருப்பவை நம்முடைய பற்கள். இவை செரிமான உறுப்புக்களில் முதலானவை; முதன்மையான வையும் கூட. எனவே, இவற்றைத் தக்க முறையில் பாதுகாப்பது நமது கடமையாகும். பற்களின் அமைப்பு:முதலில் பற்களின் அமைப்பைக் கவனிப்போம். (படம்-30)எல்லாப் பற்களும் ஒரே வித அமைப்பினைக் கொண்டவையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/332&oldid=778220" இலிருந்து மீள்விக்கப்பட்டது