பக்கம்:கல்வி உளவியல்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.4 கல்வி உளவியல் விளக்கும் துறையை ஊட்டம்?" என வழங்குவர். அதில் உடலுக்கு ஊட்டம் கிடைக்க உண்டாகும் எல்லா மாறுதல்களும் அடங்கும். உணவு உட்கொள்வது, செரிப்பது, செரித்த உணவு உடலின் பல பாகங் களுக்குக் கிடைப்பது, கழிவுப் பொருள்கள் நீக்கப்பெறுவது ஆகிய பல வும் ஊட்டத்தில் இடம் பெறும். ஊட்டத்தினுல்தான் உடலிலுள்ள ஒவ் வோரணுவின் கட்டமைப்பும் தொழில் வன்மையும் சிதையாமல் இருக் கின்றன. ஊட்டத்தில் மூன்று கிலைகள் உள்ளன. முதலாவது, உணவுப் பாதையில் நிகழ்வது; இரண்டாவது, உடலின் அணுக்களில் ஏற்படுவது ; மூன்ருவது தோல், மூச்சுறுப்பு, சிறுநீரகம் முதலிய கழிவுறுப்புக்களில் கிகழ்வது. ஊட்டம் தன் செயலைச் சரியாக நிறைவேற்றுவதற்கு இந்த மூன்று நிலைகளில் செயல்கள் சரியாக நடந்தால் மட்டிலும் போதாது. அதற்கு ஏற்ற உணவுச் சத்துக்களும் அந்தந்த உறுப்புக்களின் கலமும் அமைய வேண்டும். உணவு : உயிர் வாழ்வதற்கும் உடல் நலத்திற்கும் இன்றியமை யாத பொருள் உணவு. உணவு உடலுக்கு வலிமையைத் தருவது ; வளர்ச்சியளிப்பது ; உறுப்புக்கள் சேதமுருமல் பாதுகாப்பது ; உடலின் பல பாகங்களைக் கட்டுவது ; உடலின் மாறுதல்களைத் தாங்குவது; உடலின் கழிவுகளைச் சரிப்படுத்துவது ; உடலின் நுண்ணிய தொழில்கள் எல்லாவற்றையும் கண்காணிப்பது; உடல் அணுக்களுக்குகந்த உட்சூழ் கிலேயை அமைத்துத் தருவது; உணவுக் குறைகளை அகற்றுவது; நோயை விரட்டுவது-என்று உணவின் செயல்களைப் பலபடக் கூறலாம். நோய் நீக்கத்தில் உணவு முதன்மை பெற்றிருக்கின்றது. இதுகாறும் மனித அறிவுக்கு எட்டாமலிருந்த சில மூளை நோய்களும் இன்றைய உணவிய லறிவின் மூலமாகக் குணமடைகின்றன. தெற்றுவாயருக்குங்கூட உணவின் மூலமாகப் பேசும் ஆற்றல் உண்டாகின்றது. இது வாழ்க் கைக்கு அடிப்படையாக இருப்பதுடன் கொள்கைகள், பழக்க வழக்கங் கள், நாகரிகம், சமூக அமைப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிலும் மாறுபாடுகளை உண்டாக்குகின்றது. உணவுச் சத்துக்கள் : உணவின் எந்தெந்தப் பகுதி எந்தெந்தத் தொழில் புரிகின்றது என்று அறிய வேண்டுமாயின், உணவினைச் சோறு, பழம், புலால் என்று கருதாமல் அதனைச் சத்துக்களாகக் கருதவேண்டும். கார்போஹைட்ரேட்டுக்கள்? , பிசிதங்கள்?8, கொழுப்புக்கள்”, கரிம கேட்டம் . nutrition. 2 கார்போஹைட்ரேட்டுக்கள் - carbo. hydrates. 2 sq.ftsäsär - proteins. ** Qorqpquésé - fats.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/336&oldid=778228" இலிருந்து மீள்விக்கப்பட்டது