பக்கம்:கல்வி உளவியல்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல் நலவியலும் 315 மிலா உப்பு வகைகள்?’, விட்டமின்கள்*, நீர் என்பவை உணவுச்சத்துக் களாகும். இவை ஒவ்வொன்றையும்பற்றிச் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. கார்போஹைட்ரேட்டுகள்: சருக்கரைப் பொருள்களும் மாப் பொருள்களும் இவற்றுள் அடங்கும். இவற்றின் பெயருக்கேற்ப இவற் றில் கரி, ஹைட்ரொஜென், ஆக்ஸிஜென் ஆகியவை அடங்கியுள்ளன. பின்னிரண்டும் நீரிலுள்ளது போல் 2:1 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கார்போஹைட்ரேட்டுகள் எரிபொருள் உணவுகள்'; அவற்றிலிருந்து தான் சூடும் தசையாற்றலும் வெளிப்படுகின்றன; அவை நுரையீரலிலுள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து மெதுவாக எரியும்பொழுது இவை வெளிப்படு கின்றன. இவை உடலுக்கு வேண்டிய ஆற்றலில் அரைமுதல் முக்கால் பங்கு வரை தருகின்றன. தானியங்கள், கிழங்குகள், பருப்புக்கள், கொட்டைகள் ஆகியவற்றில் மாப்பொருளும், பழம், தேன், வெல்லம் முதலியவற்றில் சருக்கரைப் பொருளும் உள்ளன; கார்போஹைட் ரேட்டுக்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவை யாவும் தாவர மூலங்களாதலின், மலிவானவை. பிசிதங்கள் : இவை சிக்கலான சேர்க்கைகளாகும். இவற்றில் கரி, ஹைட்ரொஜென், நைட்ரொஜன், ஆக்ஸிஜென் ஆகியவை அடங்கி யுள்ளன. சில பிசிதங்களில் கந்தகமும்,32 சிலவற்றில் பாஸ்வரமும்* இருக்கின்றன. உடல் வளர்ச்சியும்உடலுறுப்புப்புத்தமைப்பும் பெரும்பாலும் பிசிதங்களாலேயே நடைபெறுகின்றன. பிசிதங்கள் உயிரின் உறைவிட மாகிய ஊன்பசைப் பொருளின் 84 முக்கிய பகுதிகளாக இருக்கின்றன. கொழுப்புக்களிலும் கார்போஹைட்ரேட்டுக்களிலும் நைட்ரொஜென் இன் மையால் அவை உடல் வளர்ச்சிக்கும் உடலுறுப்புப் புத்தமைக்கும் பயன் படா. பிசிதங்களைப் பிரிக்கும்பொழுது அமினே அமிலங்கள்' கிடைக்கின் றன; இவை கிட்டத்தட்ட இருபது வகைகள் உள்ளன. சில வளர்ச்சிக்கும் உயிர் வாழ்வதற்கும் அவசியம். அத்தகைய அமினே அமிலங்களைக் கொண்ட பிசிதங்களை முதல் தரப் பிசிதங்கள் என்று வழங்குவர். அவை பால், முட்டை, இறைச்சி முதலிய உணவுகளில் உள்ளன. உயிர் வாழ் வதற்கு மட்டிலும் துணையாக நின்று வளர்ச்சிக்குப் பயன்படாத அமினே அமிலங்களைக் கொண்ட பிசிதங்களை இரண்டாந்தரப் பிசிதங்கள் என்று Tassissær, üušas –īnorganic saits. 3 osa. Lisärast-vitamins. so stil - carbon. s. smrti.Grraga - nitrogen. s as agasi - sulphur. ** ursiosurh -phosphorus. 34. ஊன்பசைப் பொருள் . protoplasm, $5 g|1}{#9 glosop – a mino acid

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/337&oldid=778230" இலிருந்து மீள்விக்கப்பட்டது