பக்கம்:கல்வி உளவியல்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கல்வி உளவியல் கூறுவர். அவை பருப்புக்களிலும், பயறுகளிலும் அதிகமாக உள்ளன. இதர பிசிதங்கள் மூன்ருந்தர மானவை. கொழுப்புக்கள் : இவற்றிலும் கரி, ஹைட்ரொஜென், ஆக்ஸிஜென் என்ற மூன்று தனிப்பொருள்கள் உள்ளன. ஆயினும், கார்போஹைட் ரேட்டுக்களில் இருக்கும் அளவுக்கு ஆக்ஸிஜென் இவற்றில் இல்லை. கொழுப்புக்கள் ஆற்றலைத் தருவதுடன் உடலின் வெப்பம் குறையாம லிருப்பதற்கும், மேனி வளமாக இருப்பதற்கும், உடலின் சில உறுப்புக் கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் துணையாக நிற்கின்றன. வெண்ணெய் போன்ற தாழ்ந்த உருகுவரை யைக் கொண்ட கொழுப்புக்கள் எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை; இறைச்சிபோன்ற உயர்ந்த உருகு வரையைக் கொண்ட கொழுப்புக்கள் சற்றுக் கடினமாகச் செரிக்கக் கூடியவை. வெண்ணெய், மீன் எண்ணெய்போன்ற பிராணிமூலக் கொழுப்புக்களில் A, D விட்டமின்களும் அடங்கியுள்ளன. குளிர் நாடுகளில் கொழுப்புக்கள் சிறந்த உணவாக அமைகின்றன . காரணம், அவற்றிலிருந்து அதிகமான சூடு கிடைப்பதே. கரிமமிலா உப்புக்கள் : உணவிலுள்ள உப்பின் மூலங்களுள் முக்கிய மானவை சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், அயம், செம்பு, மாங்கனீஸ், குளோரின், அயோடின், புளோரின், பாஸ்வரம், கந்தகம் ஆகியவைகளே. நமது உடலில் ஏறக்குறைய 31 வகை உப்புகள் எலும்புகளை உரமாக்கிப் பல்லுக்கு உறுதி தந்து, உடலின் பல சாறுகளையும் தத்தம் இயல்பு மாருமல் இருக்கும்படி காத்துக் கண்காணிக்கின்றன. அப்படிச் செய்வதால் உடலின் உள் சூழ்நிலை காக்கப்பெறுகின்றது. நமது சமையல்முறையில் காய்கறிகளையும் கீரைகளையும் வேக வைத்து நீரை வடிப்பதால் இவ்வுப்புக்கள் இழக்கப்பெறுகின்றன. நீராவியில் வேகவைத்தால் இவை பாதுகாக்கப்பெறும். கால்சியம் : எலும்பிலும் பற்களிலும் உள்ள முக்கியமான பகுதி. அது இதயத் துடிப்பு, குருதி உறைதல், நரம்புத்தூண்டல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. கால்சியக் குறைவால் மிகுதியான நரம்புத்துடிப்பு, குறைந்த தசை இயக்கம் நேரிடுகின்றன ; கால்சியக் குறைவு ஆஸ்த்மா வுக்கும் தோல்நோய்களுக்கும் காரணமாகின்றது. பால், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு போன்றவற்றில் கால்சியம் அதிகம் இருக்கின்றது.

    • 2-5 Galsoy - melting-point.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/338&oldid=778232" இலிருந்து மீள்விக்கப்பட்டது