பக்கம்:கல்வி உளவியல்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 317 பாஸ்வரமும் எலும்புகளுக்கும், குருதி உறையாப் பகுதிக்கும்,' நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. பாஸ்வரக் குறை வால் வளர்ச்சித் தடை, சரியான எலும்பின்மை, பற்கள் அழிவு முதலி யவை நேரிடுகின்றன. பாலாடைக்கட்டி, முட்டை, கொட்டைகள், கோதுமை, பால், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் பாஸ்வரம் உள்ளது. அயம்: குருதியின் செவ்வணுக்களுக்கு மிகவும் இன்றியமையா தது. ஈரல், முட்டை, கோதுமை, பேரீச்சம் பழம் முதலியவற்றில் அயம் அதிகமாக உள்ளது. அயோடின்* புரிசைச் சுரப்பியின் முக்கிய பகுதியாகும். அயோ டின் குறைவால் தொண்டைக் கழலை நோய் உண்டாகின்றது ; குள்ளத் தன்மையும் (கூழைமை)? நேரிடுகின்றது. கடல் மூல உணவுகளும்,மீன் எண்ணெய்களும் தேவையான அயோடினத் தருகின்றன. விட்டமின்கள் : A, B கூட்டம், C, D, E, K முதலிய இருபதிற்கு மேற்பட்ட விட்டமின்கள் உடல் கலத்திற்கும், வளர்ச்சிக்கும், நீண்ட வாழ்விற்கும், கோயை எதிர்ப்பதற்கும் உயிர்த்துணையாய் இருக்கின்றன. உடலின் பல நுட்பத் தொழில்களையும் இயக்குகின்றன. பால், கீரை, முட்டை, தவிடு, முழுத் தானியங்கள், மீன், ஈரல் ஆகிய பல உணவு. களில் அவை வெவ்வேறு அளவுகளில் பரவிக் கிடக்கின்றன. நீர் : நீர் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு" மிகவும் இன்றி யமையாதது. நாம் உட்கொள்ளும் உணவைக் கரைப்பதற்கும் உடலின் வெப்பத்தைச் சரிவர நிலைநிறுத்துவதற்கும், குருதி முதலிய திரவங் களின் ஓட்டத்திற்கும், செரிமானத்திற்கும், கழிவுப் பொருள்களை அகற்றுவதற்கும் நீர் துணையாக இருக்கின்றது. ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 6 தம்ளர் நீராவது பருகவேண்டும். நார் உணவாகச் சேராதெனினும், உணவும், கழிவுப் பொருள் களும் அசைந்து செல்வதற்குத் துணையாக இருக்கின்றது. காய் கறிகள், பழங்கள், தவிடு முதலிய பண்டங்களில் நார் கிடைக்கின்றது. கார், உணவில் இல்லாவிடில் மலச்சிக்கல் ஏற்படும். 8 குருதி உறையாப்பகுதி - blood serum. 38 gutt - iron. 39 our டின் - iodine 40 குள்ளத்தன்மை - cret;iniSm. 41. வளர்சிதை மாற்றம் - metabolism. 4*Bră - roughage.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/339&oldid=778234" இலிருந்து மீள்விக்கப்பட்டது