பக்கம்:கல்வி உளவியல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும். 13 வரும் இணையற்ற தனியாள் *; இதுதான் அவருடைய தனி வீறு.”* ஆயினும், எந்த இரண்டு மாளுக்கர்களும் குருதியாலும் இனத்தாலும் தொடர்பில்லாதவராயிருப்பினும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஒரே வகையான புலனுறுப்புக்களும் பிற உறுப் புக்களும் உள்ளன; அவர்கள் ஒரு சில உளவியல் விதிகளின்படி வளர்ச்சி. யும் துலக்கமும் அடைகின்றனர். ஆசிரியர் தனிப்பட்ட மாளுக்கனை அறிய வேண்டும். குழுவாக அவர்களுக்குப் பயிற்றும் வாய்ப்பு இருப்பி னும், அவருடைய கவனம் முழுவதும் ஒவ்வொருவரும் இணையற்ற தனி யாட்கள் என்பதில் இருக்க வேண்டும். அவர்களைப் பொறித்தன்மையுள்ள குழுக்கள் என்று கருதாது உயிருள்ள ஒரு குழுவின் உறுப்பினர்கள் எனக் கருதவேண்டும். ஒவ்வொருவரும் ஒரே வகையில் ஒருவராக இருப்பினும், அவ் வகுப்பிலுள்ள ஏனையோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். ஆசி ரியர் இத் தனியாள்வேறுபாடுகளைத் தெரிந்து அவ்வகுப்பினைத் தனித்தனி யாகக்கையாளுங்கால் அவ்வேறுபாடுகளுக்குத் தக்க மதிப்புக் கொடுத் தல் வேண்டும். ஆடுகளம், உணவு விடுதி, வகுப்பறை ஆகிய இடங் களில் தனியாளாகக் கவனிக்கலாம்; சுற்றுலாச் செல்லும்போது இதற்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். குழந்தையின் இயல்பு யாது? அவனுடைய இயற்கைப் பண்புகள், ஆற்றல்கள் யாவை ? குழந்தையின் வளர்ச்சிக் கோலங்கள் யாவை ? ஆளுமை : எங்ங்னம் வளர்கின்றது? சமூக உணர்ச்சி எப்பொழுது தோன்றுகின்றது? அதை எங்ங்ணம் வளர்க்கலாம்? என்பன போன்ற விளுக்கட்கு விடைகாண்பதால் மாண்க்கர்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். இரண்டாவது: மாளுக்கர்களைப்பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவர்கள் மீது தனிப்பட்ட செல்வாக்குத் தருதல். அவர்களே நினைவில் வைத் திருந்து பெயர்கொண்டு அழைத்து, தன்னம்பிக்கையுடன் அவர்களை ஆசிரியர் அணுகலாம். உற்சாகமும் நேர்தொடர்பும் கொண்டால், அவர் களை கன்னிலையில் உருவாக்கலாம். 'அறிவே ஆற்றல்'. மாளுக்கரின் மனங்களைப்பற்றிய அறிவு கல்விப் பயன்களை எய்தும் முறையில் கொண்டுசெலுத்தத் தக்கஆற்றலைத் தருகின்றது. மேலும், உளம் எவ்வாறு கற்கிறது என்பதை வருணிக்கின்றது; ஆசிரியர், கற்றலில் அவ்வுள். ளங்களுக்குத் துண்யாக இருக்கலாம். பழக்கங்களும்” பற்றுக்களும்49 எவ்வாறு உண்டாகின்றன என்பதை உளவியல் உணர்த்துகின்றது. கற்பழக்கங்களும் விரும்பத்தக்க பற்றுக்களும் உண்டாக ஆசிரியர் துணை so seurs-individuai. 37 genest-individuality so sessio– personality, o 9 Lg&&Brülösir-habits, 4 0 Liogiëšsir-sentiments.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/34&oldid=778235" இலிருந்து மீள்விக்கப்பட்டது