பக்கம்:கல்வி உளவியல்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 கல்வி உளவியல் களைப்பும் சலிப்பும்-காரணமும் நீக்கமும் களப்பு : மனிதனுக்கு ஏற்படும் பலவகை இடையூறுகளில் ஒன்று களைப்பு: ஏதாவது ஓர் உடல்வேலையையோ மனவேலையையோ அளவுக்கு மிஞ்சிச் செய்துகொண்டேயிருந்தால் நாம் களைப்படைகின் ருேம். முதலில் மேற்கொண்டிருக்கும் வேலையின்பால் களப்புண்டா கின்றது; பிறகு வெறுப்பும் அதனைப் பின் தொடர்கின்றது. பின் வேலையை கிறுத்த வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்ற தீவிரமான ஆசை உண்டாகின்றது. அந்த வேலையையே மீண்டும் தொடர்ந்து செய்தால், தலைவலி, உறுப்புக்களில் வலி, உழைச்சல் முதலியவை ஏற்படுகின்றன. வரம்பிகந்த நிலையில் உடல் செயல்களும் உள்ளச் செயல்களும் மிகவும் குன்றிவிடுகின்றன; நம்மால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை, களைப்பு இருவகைப்படும். ஒன்று, உடல் களைப்புச்சி. இது நீடித்த இயக்கத்தால் ஏற்படும் மாறுதல்களால் உண்டாகின்றது. நெடுநேரம் தட்டச்சுப் பொறியை* இயக்கி வேலை செய்தால் விரல் தசைகள் ஒரே வகையாக இயங்குகின்றன. இதல்ை அவை களைப்படைகின்றன. இது தசைக் களைப்பு' எனப்படும். இரண்டு, மனக்களைப்பு தொடர்ந்த மன வேலையின் பயணுக மூளையில் ஏற்படும் மாறுதல்களால் இஃது உண்டா கின்றது. நெடு நேரம் கணக்குப் பாடம் படித்தால் மனக் களைப்பு:உண் டாகும். சலிப்பு : சலிப்பு' , களப்பினின்றும் வேறுபட்டது. ஒரு வேலை யைச் செய்ய ஆர்வமின்மையும் வெறுப்பும் உண்டாகும் நிலையே சலிப்பு என்பது. சலிப்பு களைப்புக்கு முன்னதாகத் தோன்றி அதனினும் விரை வாகப் பெருகுகின்றது. பலர் சலிப்பு வந்துற்றபோது தாம் களத்து விட்டதாகக் கருதுகின்றனர். இது தவறு. ஒரு களைப்பு உணர்ச்சி’ தோன்றுகின்றதேயன்றி ஆற்றல் அழிந்துவிடுவதில்லை. கவர்ச்சியின்மை யாலேயே நாம் சலிப்படைகின்ருேம். தொழிலை மாற்றினல் சலிப்பு நீங்கும். செயலில் கவர்ச்சி உண்டாக்கிக் கொள்வதாலும் சலிப்பைத் தடுக்கலாம். காரணம் : களைப்பு பொதுவாக மிகுந்த சிரமமான வேலையைச் செய்வதாலும், அல்லது சாதாரண வேலையை நெடுநேரம் செய்வதாலும் 48 &rü4 - fatigue. 44 a Libâârâu - bodily fatigue. க்க் தட்டச் & Quiro - type - writer. ** 59&#éârüH - muscular fatigue. 4 a le carà 3,8 růų - mental fatigue. * o *sûlůų - boredom. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/340&oldid=778237" இலிருந்து மீள்விக்கப்பட்டது