பக்கம்:கல்வி உளவியல்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல் நலமும் உடல்நல வியலும் 3.19 உண்டாகும். இழையங்களில் இரண்டு விதமான வளர்சிதை மாற்றச் செயல்கள் சதா நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. முதலாவது, கரம்புச் செயல்களிலும் தசை இயக்கங்களிலும் ஆற்றல் செலவழியும் பொழுது உயிரணுக்கள் தேய்ந்து சிதைவடைகின்றன. இரண்டாவதாக தேய்வுற்ற பகுதியைப் புதுப்பிக்க உடலனுப் புத்தமைப்பு நடைபெறு கின்றது. இஃது உணவாலும், உடற்பயிற்சியாலும், காற்ருலும், தூக்கத் தாலும், வேண்டாப் பொருள் அகற்றப்பெறுவதாலும் உண்டாகின்றது. இத் தேய்வு முறையும் புத்தமைப்பு முறையும் இல்லாவிடில், உடல் கலத்தையும் தொழில் இசைவையும் பெற முடியாது. முதலில் குறிப்பிட்ட தேய்வுச் சிதைவு முறையில் சில கழிவுப் பொருள்கள்-முக்கியமாக லாக்டிகஅமிலம் -உண்டாகின்றன. இவை நச்சுப் பொருள்கள்". பொதுவாக இவை ஆக்ஸிஜெலுைம் நல்ல குருதி யாலும் உடனுக்குடனே நீக்கப்பெருவிடில் அவை உடலின் பல பகுதி களுக்கும் சென்று களைப்பினை விளைவிக்கின்றன. அதாவது, தொழிலும் இயக்கமும் விரைவாக நடைபெறுவதால்,தேய்வின்வேகம் புத்தமைப்பை மிஞ்சுகின்றது. இதல்ை கச்சுப்பொருள்கள் அதிகமாகஏற்பட்டுஉயிரியின் செயலாற்றல் குறைகின்றது. சிறிது ஓய்வின்றி வன்தொழிலை நீடிததால், இந்நச்சுப் பொருள்கள் உயிரிமுழுமையும் பரவி முழுக்களைப்பு நிலையை உண்டாகிவிடுகின்றது. இந்த உண்மையை அறிஞர்கள் சோதனை வாயிலாக நிரூபித்துள்ளனர். (எ.டு) களப்படைந்த பிராணியின் குருதி யைக் களைப்படையாத பிராணியின் உடலுட் செலுத்தினுல் அதுவும் களைப்படைந்து விடுகின்றது. களைப்புக்கு மற்ருெரு காரணம் ஆக்ஸிஜென் குறைவு. குருதியில் செவ்வணுக்கள் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜெனின் உதவியாலன்றி ஆற்றல்தரும் சேர்க்கைகளைச் சிதைத்து உடலாற்றல் பெற முடி யாது. மனக் களைப்பு உடற்களைப்போடு நெருங்கிய உறவினைக்கொண்டது. இரண்டுவிதக் களப்புக்களும் ஒன்றையொன்று தூண்டக்கூடிய ஆற்றலை யுடையவை. ஒரு தேர்வு அல்லது அதுபோன்ற தொடர்ச்சியான மன வேலைக்குப் பிறகு, ஏதாவது உடல் வேலையை மேற்கொள்வதென்பது சாத்தியப்படுவதில்லை. அங்ங்ணமே, கன்ருக விளையாடி உடல் முற்றக் களைத்த பின்னரோ, அல்லது கடுமையான ஒரு பிரயாணத்திற்குப் பின் னரோ மனவேலையால் ஒன்றினை ஊன்றிக் கவனிப்பது இயலாததாகும். 48 இழையம் -tissue, so ories so - lactic acid. Esso பொருள் toxin.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/341&oldid=778240" இலிருந்து மீள்விக்கப்பட்டது