உடல் நலமும் உடல்நல வியலும் 321 களப்பு நீக்கம்: பெரும்பாலான பெற்றேர்களும் ஆசிரியர்களும் குழந்தைகள் எப்பொழுதும் களைப்படைவதில்லை யென்றும், அவர்கள் நாள் முழுவதும் விளையாடுகின்றனர் என்றும், குறையாத ஆற்றலை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் நம்புகின்றனர். இது தவறு. குழந்தை கள் விரைவில் களைப்பெய்துகின்றனர். வயதுக் குறைவிற்கேற்ப இக் களைப்பு அதிகப்படுகின்றது. களைப்பை நீக்கும் முறைகளைக் கையாள்வது பள்ளிகளின் கடமையாகும். தொழில் அல்லது பாடமாற்றம், உடல் நிலையை மாற்றல், சிறு விளையாட்டுக்கள், தீவிரமான சிறு உடற்பயிற்சிகள், நல்ல காற்று,முகங் கழுவுதல், நீர் பருகுதல், சுவையான சிறுகதைகள், விருப்பமான வேலை, இசை போன்றவற்றைச் சமயத்திற்குத் தக்கவாறு பயன்படுத்திக் களைப் பைப் போக்கலாம். பள்ளிப் பாடவேளைப்பட்டியைத் தக்கமுறையில் தயா ரித்தலாலும் களைப்பை அகற்றலாம். ஆசிரியரின் உற்சாகமும் ஓரளவு மாளுக்கர்களின் களைப்பைப் போக்கும். இவற்றைத் தவிர, வேறு சில் முறைகளும் உள. அவற்றையும் சிறிது கவனிப்போம். 1. ஒய்வுகளைப்பைத் தடுப்பதற்கு ஓய்வு மிகவும் இன்றியமையா தது. களப்பில் அரைகுறைத் தூக்கநிலைத் தென்பட்டால் தூக்கமும் ஒய் வும் அவசியம் என்பதைக் காட்டுகின்றது. தூக்கத்திலும் ஓய்விலும் புதிய உடலணுக்கள் அமைவதுடன், புதிய ஆற்றல் மீண்டும் கிடைக்கின்றது. உயிரி புத்துணர்ச்சியைப் பெறுகின்றது. 2. தொழில் மாற்றம்:உடலின் ஒரு பாகம் அதிகமாக வேலை செய் தால், வேருெரு பாகத்திற்கு வேலைகொடுத்துக் களைப்படைந்த பாகத் திற்கு ஓய்வளிப்பது பயன் தரும். மனவேலையில் மூளையின் சிலபகுதி களே செயற்படுகின்றன. அப்பொழுது உடலுக்கு வேலைகொடுத்தால் மூளையின் வேறு மையங்கள் செயற்படும்; முதலில் செயற்பட்ட மையங் களும் ஓய்வு பெறும். காந்தியடிகள், ஸ்டாலின், சர்ச்சில் போன்ற பெரி யார்கள் அதிகமாக மனவேலையில் கருத்துன்றிச் செயற்பட்டதற்குக் ಹ್ರ್ರ ணம், அவர்கள் மேற்கொண்ட பல்வேறு செயல்களடங்கிய வேலைத் திட் டமே; அதனுல் அவர்கள் ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு மாறிக்கொள் &#ss. 3. கவர்ச்சி: களைப்புக்கு மருந்துபோல் உதவுவது தீவிரமா" கவர்ச்சி. செயலாற்றுவதில் கவர்ச்சி சிறந்ததோர் இயக்கவன்மையாகும். நாம் மேற்கொள்ளும் வேலையில் கவர்ச்சியை உண்டாக்கிக்கொண்டால் மன ஊக்கம் மிகும்; களேப்பும் தடைப்படும். தேர்வுக் காலத்தில் வெற்றி க.உ.21
பக்கம்:கல்வி உளவியல்.pdf/343
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை