பக்கம்:கல்வி உளவியல்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கல்வி உளவியல் யின்மீது கவர்ச்சிகொண்டு மாளுக்கர்கள் இரவெல்லாம் கண் விழித்து அளவுக்கு மீறிய வேலையைச் செய்வது இதற்கு ஓர் எடுத்துக்காட்டா கும. 4. ஊட்ட உணவு: ஊட்ட உணவு எளிதில் களைப்பைத் தெளிவிக் கின்றது. பால், பழம், சருக்கரைப்பொருள் ஆகியவை சிறப்பாகப் பயன் தருபவைகள். தேயிலை, காப்பி, கொக்கோ ஆகியவை தற்காலிகமாகக் களைப்பைத் தள்ளிவைக்கின்றன. இன்றைய நாளில், சிறப்பாக திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் கல்வித்துறை இயக்குநராக வந்த பிறகு பிள்ளைகட்கு நடுப்பகல் உணவு அளிப்பது குறிப்பிடத்தக்க தாகும். பலர் களைப்பை நீக்குவதற்காகவே அடிக்கடி சிறிதளவு உணவு கொள்கின்றனர். 5. விரைந்து செயலாற்றுதல்: ஒரு வேலையை மெதுவாகச் செய்வ தைவிட, விரைந்து செயலாற்றுதல் களப்பினைக் குறைப்பதாகும். தார ணம், விரைந்து செயலாற்றும்பொழுது தடங்கல்களையும் கவனச்சிதறல் களையும் நாம் அகற்றி வேலையிலும் நல்ல பொருத்தப்பாட்டை எய்துவிக் கின்ருேம். இதல்ை நம் திறமைக்கு மிஞ்சிய வேலையை முடிக்க வேண்டு மென்று முனைதல் கூடாது. 6. நல்ல பழக்கங்கள்: கற்பழக்கங்களை அமைத்துக்கொண்டு வேலையை எளிதாகச் செய்துமுடிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் நெடுநாள் செய்து வந்த வேலையைக் களைப்பின்றி நீண்ட நேரம் செய் யலாம். ஆனல், பழகாத புதிய வேலையை மேற்கொள்ளும்பொழுது எளி தில் களைப்புறுகின் ருேம். பொழுதுபோக்குக் கவர்ச்சிகள் வாழ்க்கையைச் சரிவர கடத்த வேண்டுமாயின், நல்ல முறையில் ஆயத்தம் செய்யப்பெற்ற வேலைத்திட்டம் வேண்டும். அதில் வேலையால் உண்டாகும் களைப்பினைப் போக்கிக்கொள்ளப் பொழுதுபோக்கும் ஓய்வும் இடம்பெறுதல் வேண்டும். வேலையில் சில மணி நேரம் செலவிடுவது நாம் சமூகத்திற்குச் செய்யவேண்டிய கடமை; நாம் உயிர்வாழ் பிராணியாத லால், சில மணி நேரம் தூக்கத்தில் செலவிட்டேயாக வேண்டும்; ஒய்வு நேரத்திலுள்ள சில மணி நேரங்களைத்தான் நம் விருப்பப்படிச் செலவிட லாம். இந்நேரத்தைச் செலவிடுவதற்கும் நம் உடல் நலத்திற்கும் நேரான தொடர்பு உண்டு. ஒய்வு நேரத்தைப் பெரும்பாலும் பொழுதுபோக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/344&oldid=778245" இலிருந்து மீள்விக்கப்பட்டது