பக்கம்:கல்வி உளவியல்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கல்வி உளவியல் படம் பார்த்தல், நீந்துதல், பாடுதல், இசைக் கருவிகளே இயக்குதல், நாட கம், சிறுகதை எழுதுதல்போன்றவை நல்ல பொழுதுபோக்குச் செயல் களே. பொழுதுபோக்குச் செயல்களில்தான் சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சி யுறுகின்றனர். விருப்பச் செயல்கள்: பொழுதுபோக்கு, துணைகிலே வேலைகளாலும் கிடைக்கின்றது. இவ்வகைச் செயல்கள் விருப்பச் செயல்கள்’’’ என வழங்கப் பெறுகின்றன. பெரும்பாலும் தனியாள் கொள்ளும் கவர்ச்சிக் கேற்பவே விருப்பச்செயல் மேற்கொள்ளப்பெறுகின்றது. விருப்பச் செயல் மனத்தைப் புதிய பாதையில் திருப்பி, சிறந்த பொழுதுபோக்கினைத் தருகின்றது. அது மனத்திற்கும் புத்துயிர் அளிக்கின்றது; மன உரத்தைத் தருகின்றது. மனத்தை விரிவடையச் செய்து வாழ்க்கையில் புதிய தொடர்புகளையும் உண்டாக்குகின்றது. பள்ளியில் விருப்பச் செயல்களைத் தேர்ந்தெடுத்து மாளுக்கர்கள் அவற்றில் ஈடுபடுவதற்குத் தக்க வாய்ப்புக் களை கல்குதல் வேண்டும். பால்-கல்வி-கல்வியில் அதன் இடம் மேல்நாடுகளில் பெரும்பாலான பெற்றேர், மருத்துவர், கல்வி யதிகாரி கள் போன்றவர்கள் சிறுவர்கட்குப் பால்-அறிவு புகட்ட வேண்டுமென் றும், அங்ங்னம் புகட்டாவிடில் வேறு சிறுவர்களிடமிருந்தும் மட்டரகமான வெளியீடுகளிலிருந்தும் தவருன செய்திகளை அவர்கள் ஏற்க நேரிடும் என் றும் கருதுகின்றனர். ஆளுல் இக்கல்வி எப்பொழுது, எவ்வளவு, எப்படி, யாரால் கொடுக்கவேண்டும் என்பதுபற்றியே கருத்து வேறுபாடு உண்டு. பால்.கல்வி புகட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் பலர் மறுப்பதில்லை. பால்-கல்வியற்றிய பிரச்சினை ஆசிரியரின் வேலையினிடையே நிகழும் ஒரு பிரச்சினையாகும். எனினும், அது அவ்வளவு முக்கியமன்று என அலட்சியப்படுத்திவிடக்கூடியதொன்றன்று. பொதுவாக ஏனைய கல்வி போல் குழுநிலையில் வெளிப்படையாகப் பால்.கல்வியைப் புகட்டுதல் விரும்பத்தக்கதன்று என்பது உண்மையே. எனினும், சிறுவர்கள் பாலைப் பற்றிய அறிவு அவசியம் பெறவேண்டும் என்பதை அனைவருமே உணர்' கின்றனர். புகட்டுவதற்குப் பொறுப்பாளர்: சிறுவர்கள் பால் பற்றிய பலவினக் களை விடுக்கும்பொழுது உள்ளக்கிளர்ச்சிகளை எழுப்பாது ஆண்-பெண் sa sagtuă asusas - hobbies. *a ur-zsef - sex-education.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/346&oldid=778250" இலிருந்து மீள்விக்கப்பட்டது