பக்கம்:கல்வி உளவியல்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 329 போது அவர்கள் அவனை ஓர் அரக்கன் என்று கருதினர் . ஆனல், அவன் அரக்கர்கள் நடுவே காணப்பட்டபொழுது, அவ்வரக்கர்கள் அவ னைக் குள்ளனகவே கருதினர். அவனுடைய அளவு ஒன்றுதான் என்ப தையும், அளவுகோல்கள்தாம் வேருனவை என்பதையும் நாம் அறிவோம். வேறு சில எடுத்துக்காட்டுக்கள் தருவோம். குதிரைகளையும் தவளை களையும் உண்ணும் பிரெஞ்சுக்காரர்களின் நடத்தை, இறந்த காட்டுப் பன்றிகளையும் உயிருள்ள கிளிஞ்சல்களையும் உண்ணுவதற்கு விரும்பும் "இயல்பான அமெரிக்கனுக்கு அதிர்ச்சியைத் தருகின்றது. சூனியத்தில் கம்பிக்கையுள்ள கடுந்துய்மைச் சமயக் குருமார்கள் சூனியக்காரர்கள் என ஐயப்பட்டவர்களின் உயிர்களை வாங்கினர்; அவர்கள் நடத்தை அக் காலத்தில் இயல்பானதாகக் கருதப்பெற்றது. ஆல்ை, அவர்களின் வழித் தோன்றல்களாகிய குருமார்கள் சூனியத்தில் கம்பிக்கை கொண்டாலும், ஐயப்பூடுபவர்கரின் உயிர்களை வாங்க நினைத்தாலும் அவர்களின் இந் நடத்தை, இன்று பித்தர்களின் புகலிடத்திற்கு அனுப்புவதற்குப் போது மானதாகும். மேலே காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுக்கள் யாவும் அகவயமா னவை ; சொந்த விருப்பு வெறுப்புக்களையோ, ஒரு குழுவின் விருப்பு வெறுப்புக்களையோ அடிப்படையாகக் கொண்டவை. அப்படிப் பார்த் தால், அறிவியல் துறை, அரசியல் துறை, சமயத் துறையில் தோன்றி உயர் குறிக்கோளுக்காக உயிர்களைத் துறந்த பெரியோர்களின் நடத்தை களை இயல்பு பிறழ்ந்தவையாகக் கருத நேரிடும். ஆனல், இங்கு உளவிய லார் கருதும் இயல்பு பிறழ்ந்த நடத்தைகளைப்பற்றியே காம் ஆராயப் போகின்ருேம். முதலில் குழந்தைகளிடம் வீடு, பள்ளிச் சூழல்களால் அவ்வித நடத்தைகள் தோன்றுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம். குடும்ப நிலையிலுள்ள ஏதுக்கள் சிறுவன் கிட்டத்தட்ட ஆறு யாண்டுகள் வரையிலும் குடும்பச்சூழலி லேயே வளர்ந்து வருகின்ருன் குடும்பத்தில்தான் சிறுவன் நாடும் அன்பு, பாதுகாப்பு, விடுதலை, பாராட்டு, தன்மதிப்பு போன்றவை கிடைக்கின் றன. அவற்ருல் அவை பொருத்தப்பாடு அடைகின்றன். பள்ளிக்கு வந்த பிறகும் அதிகமான நேரத்தை வீட்டிலும் சமூகத்திலுமே கழிக்கின் ருன். அவனது ஆளுமை வளர்ச்சி தொடர்ச்சியாக ஏற்படும் பொருட்டுப் பள்ளி புகுந்த பின்னரும் அவன் குடும்பமும் சமூகமும் பொருத்தப் பாட்டிற்கு வேண்டிய சூழ்நிலையை அவனுக்கு அமைத்துத் தந்து உதவ க கடுந்துய்மைச் சமயக் குரும riss-Puritan Fathers.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/351&oldid=778261" இலிருந்து மீள்விக்கப்பட்டது