பக்கம்:கல்வி உளவியல்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 கல்வி உளவியல் பெறும் அளவிறந்த போட்டி மனப்பான்மையைப்பற்றிச் சிறிது ஆராயவேண்டும். போட்டி மனப்பான்மைக்குப் பள்ளிகள் மிதமிஞ்சி இடந்தரலாகாது என்பது அறிஞர்களின் கருத்து. தேர்வுகள், மதிப் பெண்கள், வகுப்புக்கள், பரிசுகள் போன்றவை போட்டியை மிதமிஞ்சி வளர்க்கின்றன என்றும், அவற்றை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். இவ்வித ஏற்பாடுகளில் மெதுவாகக் கற்போரும் சராசரி மாளுக்கர்களும்கூட மனந்தளர்ந்து போகின்றனர். விரைவாகக் கற்கும் மாளுக்கர்களும் தம் திறமைகளைப்பற்றித் தலைக் கனம்' கொண்டு பீடெய்துகின்றனர். அளவிறந்த போட்டி மனப் பான்மை பிறர்நலத்தைப் புறக்கணிக்கச் செய்து விடுகின்றது ; தன்னலம் கருதும் தன்மையையும் வளர்க்கின்றது. தேர்வுகளால் வேறு பல தீங்குகளும் விளைகின்றன. போட்டிச் சூழ் நிலையில் மதிப்பெண்களை மாற்றும் அடிப்படையாகக் கொண்ட நீண்ட தேர்வுகள் மாளுக்கர்களிடம் அதிகமான களைப்பையும் அலுப்பையும் விளைவிக்கின்றன. தேர்வுகளின் முடிவுகளைக் கொண்டே சில பெற்ருேர் கள்--ஏன், சில பள்ளித் தணிக்கையாளரும்கூடி-பள்ளிகளின் திற மையை அளக்க முற்படுகின்றனர் ; பள்ளி கிர்வாகமும் அதே அளவு கோலால் ஆசிரியர்களின் திறமையை அளக்கத் துணிந்து விடுகின்றது. மாளுக்கர்களின் திறனை அளக்க வேண்டிய தேர்வுகளின் முடிவுகளைக் கொண்டு இப்படி ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியவாறு செயற் படத் தொடங்குவது மிகவும் வருத்தப்படக்கூடிய தொன்று. இதனல் வேறு சொல்லமுடியாத விளைவுகளும் ஏற்படவும் கூடும். ஆசிரியரின் போக்கு : சில ஆசிரியர்களின் போக்கும் மாணுக்கர்களின் மனநலத்தைப் பாதிக்கக் கூடும். கிந்தை, மறை வசை கேலி, அவமானப்படுத்தல், அதிகவேலையிடல், தண்டனை விதித்தல் போன்றவைகள் மாளுக்கர்களிடம் இயல்பிகந்த நடத்தை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. ஆசிரியர்கள் இவற்றை அறவே நீக்க வேண்டும்; எந்த விதத்திலும் மாளுக்கர் மனம் புண்படுமாறு இவற்றை மேற்கொள்ளலாகாது. மேலும், பள்ளி வாழ்க்கை ஆசிரியர் களின் நன்மையைப் பொறுத்தது. ஆசான் எவ்வழியோ, சீடன் அவ்வழி”. ஆசிரியரின் நடத்தையை மாணுக்கர் குறிப்புணர்ந்து கொள் வதால் அஃது அவர்கள் நடத்தையையும் பாதிக்கின்றது. முன்கோபம், அதிகாரவெறி போன்றவை விரும்பத் தக்கவை அல்ல. - ** tops iso-sarcasm.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/356&oldid=778272" இலிருந்து மீள்விக்கப்பட்டது