பக்கம்:கல்வி உளவியல்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 கல்வி உளவியல் சிலவற்றில்தாளு என்றும், நினைவாற்றல் எத்தகையது என்றும், வீட்டில் வசதிக்குறைவுகள்,அடக்குமுறை முதலியன உண்டா என்றும், உள்ளக் கிளர்ச்சிகளில் நெருக்கடி, மிதமிஞ்சிய அச்சம், மனத்தை கிலே நிறுத்துவதில் இடர்ப்பாடு, சோம்பல், விளையாட்டில் ஆர்வமின்மை உளவா என்றும் கவனித்தல் வேண்டும். அங்ங்னமே, பள்ளிச்சூழ் நிலைகளிலும் உள்ள குறைகளை ஆராயவேண்டும். சரியான வகுப்பில் சேர்க்கப்பெற்றமை, உடற்குறைபாடுகள், பயிற்சி முறையில் உள்ள குறைபாடுகள், கற்பித்தலில் குறைபாடுகள், பயிற்றப்படும் பொருள் கள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். படக்காட்சிகள், தன்ளுேக்க முயற்சி முறை, மகிழ்ச்சிச் செலவுகள், கைவேலைகள் முத லிய யுக்தி முறைகள் இவர்கட்கு உற்சாகம் அளிக்கக் கூடும். தன்னம் பிக்கையையும் வெற்றி மனப்பான்மையையும் உண்டாக்கினுல், இவர்களி டம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இவர்களை விளையாட்டுக் குழுக் களின் தலைவர்களாக்கலாம். சமூகப் பணியில் இவர்கட்கும் பெரும்பங் குண்டு என்பதை ஆசிரியர்கள் மறக்கலாகாது. ஒதுக்கப்பெற்ற குழவிகள்: அமெரிக்கப்பள்ளி யொன்றில் சோதனை யொன்று மேற்கொள்ளப்பெற்றது. ஒவ்வொரு குழந்தையும் தன் அருகில் அமர விரும்பும் குழந்தைகளின் பெயர்களை எழுதவேண்டும்; ஒருவர், இருவருடைய பெயர்களை எழுதலாம். இவ்வாறு எழுதச் செய்த தில் ஒரு குழுவில் மொத்தத்தில் 15% முதல் 38% வரை குழந்தைகள் தம் முடன் பயிலும் மாளுக்கர்களால் தேர்ந்தெடுக்கப் பெறவில்லை. இதி லிருந்து பள்ளிகளில் மாளுக்கர்கள் பொருத்தப்பாடு எய்துவதில் இடர்ப் பாடுகளடைகின்றனர் என்பது புலகிைன்றது. இவ்வாறு ஒதுக்கப்பெறும் மாணுக்கர்கள் தம்நிலைக்கு மிகவும்இரங்கு கின்றனர். ஒரு குழுவில் மதிப்புள்ள உறுப்பினராதலால் கிடைக்கும் ஏற்றம் அவர்கட்கில்லை. விரைவில் பிறருடன் நட்பு ஏற்படுத்திக்கொள் ளும் முயற்சியைக் கைவிட்டுக் கற்பனை யுலகில் கனவு கண்டு களிக்கின் றனர். மேலும், இவர்கள் தம்மிடம் ஏதோ குறையிருப்பதாகவும், தாம் மற்றவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்றும் தவருண எண்ணத்தைக் கோள்ளுகின்றனர். இதற்கு ஒரு காரணம், குடும்ப இட கிலேயாமை. குடும்பம் அலுவல் காரணமாக அடிக்கடி இடம் மாறுவதால் மொழி, சமயம், சாதி, பொரு ளாதார ஏற்றத்தாழ்வு, பழக்க வழக்கங்கள் முதலியவற்ருல் வேறுபட்ட மாளுக்கர்களிடையே ஒரு குழந்தை புக நேர்கின்றது. குழந்தையை அவர்கள் மதிக்காததுமின்றி வெறுக்கவும் செய்கின்றனர். மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/362&oldid=778288" இலிருந்து மீள்விக்கப்பட்டது