பக்கம்:கல்வி உளவியல்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 343 இக் குழவிகளின் பண்புகள் : நெறி பிறழ்ந்த குழவிகளின் புறநிலைச் செயல்களுக்கும், அவை வாழ்ந்துவந்த நிலைக்கும், அவற்றின் மன நிலைக்கும் ஒற்றுமை உண்டு என்று கூறிவிடலாம். ஒருவன் சமூகத் தில் சரியான இடம்பெற வேண்டுமாயின் உண்மை யென்னும் கூறினைக் கருத வேண்டும் என்பதை இவர்கள் மதிப்பதில்லை. இவர்கள் உலகத் தோடு ஒட்ட ஒழுகலின் சிறப்பினை அறியாததால், அடிக்கடி இடர்களுக் குட்படுகின்றனர். 'தான்' என்ற எண்ணமும் மேம்பாட்டு மனநிலையும் வளர, அறிவு நிலை சிறந்து விளங்கவேண்டும். இவர்களது கீழான அறிவு கிலே அவ்வாறு உணர்வதனைத் தடுக்கின்றது. இதல்ை இத்தகைய குழ விகளைச் சீர்திருத்துவது அருமையிலும் அருமையாகும். இவர்களிடையே சமுதாய உணர்ச்சியும், மெய்ப்பாடுகளும், மன நிலைகளும் சமமாக விளங் காது அமைதியின்றிக் கொந்தளித்து வரவும் காண்கின்ருேம்; சமுதாய உணர்ச்சி மழுங்கித் தேயவும் காண்கின் ருேம். ஒரே குடும்பத்தில் ஒன் ருக ஒத்து வாழ்கின்ற குழவிகளுள் சில மனமுடைந்து நெறி பிறழ்ந்த நடத்தையில் இறங்குவதையும், சில நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவ தையும் காண்கின்ருேம். இவ்வாறு ஒரே புறநிலை ஒரு குழவியின் மன நிலையை ஒரு வகையாகவும், வேருெரு குழவியை வேருெரு வகையாக வும் தூண்டுகின்றது. எனவே, உண்மையை அறிய வேண்டுமாயின், புற நிலையை மட்டிலும் ஆராய்வதால் பயனில்லை. இதன் மணவாழ்க்கை முழுவதையும் நாம் அறிதல் வேண்டும். சில அறிதிறன் மிக்க சிறுவர்களும் வாழ்க்கையின் உண்மையைக் கருதாது நெறிபிறழ்ந்த நடத்தையில் இறங்குகின்றனர். இத்தவறு அறி வுக்குறைவி னின்றும் வேறுபட்டது. திரும்பத்திரும்பத் தவறும் சிறு வர்கள் உலகத்தில் எல்லாம் தவருக அமைந்துள்ளன என்றும், தமக்கு வேண்டியவற்றை உலகம் கொடுக்காவிட்டால் தாமே அவற்றை எடுத் துக் கொள்ளலாம் என்றும் எண்ணுகின்றனர். பணம், நேர்த்தியான பொருள்கள், தின்பண்டங்கள், பிற உடைமைகள் போன்றவற்றில் ஆசை கொண்டு அவ்வாசை நிறைவ்ேருவிடில் சிறுவர்கள் தங்களால் இயன்ற முறைகளில் இவற்றைப் பெற முயலுகின்றனர். தம்மை எதிர்ப் பவர்கள் யாரும் தவறுடையவர்கள் என்றும்,தம்மை அவர்கள் எதிர்க்குங் கால் அவர்கட்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் எண்ணுகின்ற னர். இந்த கியாயத்தால் அவர்கள் ஏமாற்றவும் திருடவும் வழிகளை க9 இக்கருத்துபற்றியே தொல்காப்பிய உரையாசிரியராகிய "வறுமை’ என்பதற்குப் போகந்துய்க்கப்பெருத பற்றுள்ளம் என்று மொருள் கூறிஞர்போலும், (தொல் - பொருள் - 253-வது நூற்பாவின் உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/365&oldid=778294" இலிருந்து மீள்விக்கப்பட்டது