பக்கம்:கல்வி உளவியல்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பு பிறழ்ந்த நடத்தை 353 மாயின், பொய் சொல்லுவதற்குரிய காரணங்களை நாம் அறிய வேண்டும். காரணங்கள் : சிறுவர்களின் சொந்தக் காரியங்களில் வளர்ந்த வர்கள் அவைசியமாகக் குறுக்கிடுவதால் பொய் பிறக்கின்றது. குழவிகள் இரகசியங்களைக் காப்பதற்கும், பிறரைப் பாதுகாக்க வும், திடீர்ச் செய்திகளை ஏற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்தவும் போன்ற சமூக நன்மை நோக்கங்களுக்காகப் பொய் சொல்லுகின்றனர். குழவிப் பருவத்தின் பொய்கள் யாவும் அவர்களுடைய வளமான கற்பனையின் காரணமாகவும், உண்மை நிலையையும் பாவனை நிலையையும் பிரித்தறிய முடியாததன் காரணமாகவும் எழுபவை. இளங்குமரப் பருவத்தில் பகற் கனவுகளின் காரணமாக எழும் பொய்களுக்கும் இக்காரணத்தையே பொருத்திக் கூறலாம். தெளிவற்ற பொய்க்குக் காரணம் உள்ளத்தினுள் நடைபெறும் போராட்டமே; பொய்யின் வடிவம், உள்ளே நசுக்கப்பெற் றுள்ள சிக்கலின் இயல்பினை உணர்த்தும் அறிகுறியாகும். சில சமயம் இளங்குமரப் பருவத்தினர் உண்மையை மிகைப்படக் கூறுதற் பொருட்டும் பெருமைபடுத்திக்கொள்ளும் பொருட்டும் புனைந்துரை களைப் பகர்வர்; 'பெரிய கதைகளைக் கட்டிவிடுவர். கேட்போர் கிளர்ச்சியுறும் பொருட்டும் ஒருவருடைய முக்கியத்துவத்தைப் பெருக்கிக் காட்டவும் இம்முறைகளைக் கையாளுவர். இதல்ை அவர்களிடம் அடக் கப்பெற்றுக் கிடக்கும் தற்சாதிப்பு அல்லது முதன்மையூக்கத்திற்கு வெளி யீடு கிடைக்கின்றது. இத்தகைய பொய்யர்கள் உண்மையிலேயே தாம் செப்பும் பொய்களை நம்புகின்றனர்; அடிக்கடி இவற்றைக் கூறுவதால் தம் கனவிலியுளத்தின் விருப்பங்களையும் கிறைவேற்றிக் கொள்ளு கின்றனர். சிறு வயதில் உண்மையைத் திரித்துக் கூறும் நோக்கம், தற்காப்பின் பொருட்டும் அல்லது தண்டனையினின்று தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டுமே; சில சமயம் சிக்கல்களினின்றும் தன்னைவிடுவித்துக்கொள் ளும் பொருட்டும் பொய் சொல்லப்பெறுகின்றது. குழந்தைகள் வளர வளர, சமூக நன்மை நோக்குடன் சொல்லப்பெறும் போய்கள் குறைந்து, சமூகத்திற்குக் கேடுண்டாகும் பொய்கள் பெருகுகின்றன. அன்ருட நிகழ்ச்சிகளால் ஏனைய பொய்கள் ஏற்படுகின்றன. முதி யவர்கள் சொல்லும் பொய்களைக் கவனித்ததன் பயனல் சிறுவர்கள் பொய் சொல்லுகின்றனர். மூத்தோர் சிறர்கட்குக் கூறும் அறவுரைகளை விட 37 to so sul-ā ai, pè-exaggeration. க.உ.23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/375&oldid=778315" இலிருந்து மீள்விக்கப்பட்டது