பக்கம்:கல்வி உளவியல்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒழுக்க வளர்ச்சி 'ஒழுக்கம்' என்பதைப்பற்றி நாம் பலபடியாகப் பேசுகின்ருேம். கல் லொழுக்கம் என்றும் தீயொழுக்கம் என்றும், உயர் ஒழுக்கம் என்றும் தாழ்வொழுக்கம் என்றும் ஒழுக்கம் பலவிதமாகப் பாகுபடுத்தி உரைக்கப் பெறுகின்றது. ஒழுக்கம் என்பதற்குப் பலவிதமாக இலக்கணம் கூற லாம். கூறுவோர் நோக்கத்திற் கேற்ப அவரால் கூறப்பெறும் இலக்கணமும் அமையும். உயிர் நூலார் ஒருவிதமாக உரைப்பர்; அற நூலார் பிறிதொருவிதமாகப் பகர்வர். கல்வி உளவியல் நெறிப்படி இன்னுெரு விதமாக இவ் விலக்கணம் அமையும்; இங்குச் சமூக இயல் பற்றிய கூறுகளே இது அடக்கிக்கொண்டு இலங்கும். திருவள்ளுவர் 'ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தில் தரும் சில குறள்கள் ஈண்டு ஒர்ந்து உணர்தற்பாலன. கல்வி உளவியல் கூறும் ஒழுக்கம் யாது? தனியாள் கொண்டிருக் கும் எல்லா மனப் போக்குகளின் ஒட்டுமொத்தமே ஒழுக்கம் என்பது. முதலாவதாக, அது குடிவழியை, அஃதாவது பிறவியிலேயே இயல்பாக அமைந்த போக்குகளே-இயல் பூக்கங்களே-அடிப்படையாகக் கொண் டது. நாளடைவில் இப்போக்கு தனியாள் சமூகச் சூழ்நிலையில் பெறும்பட் டறிவின் மூலம் திருத்தியமைக்கப்பெற்றுப் பழக்கங்கள் அவற்றின் இடத் தைப் பெறுகின்றன. ஒழுக்கம் பழக்கங்களின் திரட்சியே என்று நாம் அடிக்கடிக் கூறுகின்ருேமன் ருே? ஆனால், ஒழுக்கம் பழக்கங்களுக்கும் மேற்பட்டது. காரணம், பழக்கங்கள் பொறியியல் தன்மையுடையவை; ஒரு குறிப்பிட்ட நிலைமைகளுக்கேற்றவாறு தாமாக இயங்குபவை; ஆனல் வாழ்க்கை இங்ங்னம் தானுக இயங்குவதன்று; பொறியியல் தன்மை யுடையதுமன்று. பழக்கங்களுக்குப் பின்னணியாக கின்று இயங்கக் கூடிய செயலாண்மை’ ஒன்றிருக்க வேண்டும்; இவ்வாற்றல்தான் அவற் றைக் கட்டுப்படுத்தி அவை செல்லும் வழியிலிருந்து மீட்டும் புதிய 4 செபலாண்மை - agency,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/390&oldid=778345" இலிருந்து மீள்விக்கப்பட்டது