பக்கம்:கல்வி உளவியல்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 கல்வி உளவியல் கின்ருன்; அச்சுறுத்தும்பொழுது வெறுப்பு கொள்கின்றன். எனவே, அவனுடைய அன்னை பல நிலைகளுக்கேற்ப உவகை பூட்டும் பொருளாக வும், சினமூட்டும் பொருளாகவும், வெறுப்பூட்டும் பொருளாகவும் அமை கின்ருள். சிறுவனுடைய பட்டறிவுகளின் பயனக அவனுடைய அன்னை யைச் சுற்றிப் பல உள்ளக் கிளர்ச்சிகள் அமைகின்றன. இந்த உள்ளக் கிளர்ச்சிகளின் தொகுதியே-பிண்டமே-பற்று என்பது. * சில எழுச்சிகளையும் விழைவுகளையும் குறிப்பிட்ட பொருள்களுடன் இணைத்துத் துய்க்கும் தனிப்பட்ட போக்கே பற்று என்பது' என்பது மாக்டோகலின் கூற்ருகும். சிறுவன் வளர வளர, அவனுடைய வாழ்க்கையில் பெரும்பகுதி பற்றுக் களால் நிறைகின்றன; பள்ளியை நடுவாகக் கொண்டு பல பற்றுக்கள் வளர்கின்றன. தனிப்பட்ட ஆசிரியர் மீது பற்று உண்டாகின்றது. நமது நாட்டைப் பொருத்தமட்டிலும் குடும்பத்தின்மீது பற்று உண்டாகின்றது. அதன் பிறகு நாட்டை விரும்புகின்ருேம். அதன் பயனுக நாட்டுக் குழைத்து, அழியாப்புகழ்பெற்ற, தன்னலமற்ற வீரர்கள் அறிஞர்கள் சமய தூதர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நாட்டுக்கொடி, நாட்டு வாழ்த்துப் பாடல் போன்றவற்றைப் போற்றுகின்ருேம். பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாடலே ஈண்டு நினைவு கூர்க. இந்த விதமான உள்ளக் கிளர்ச்சிகளின் சேர்க்கை நாட்டுப்பற்றைக் குறிக்கின் p朝· இந்தப் பற்றுக்களைப்போலவே, மாளுக்கர்களுக்குப் பாடங்களி லும் பற்று அமைவதுண்டு. பற்றுப் பொருளைக் கதிரவனுகவும், உள்ளக் இளர்ச்சிகளைக் கோள்களாகவும் உருவகப்படுத்தி உரைக்கலாம். கோள்கள் கதிரவனைச் சுற்றி வருவன போலவே, உள்ளக் கிளர்ச்சிகள் பற்றுப் பொருளைச் சுற்றுகின்றன. காட்சிப் பொருள்களைச் சுற்றியும் மனிதர்களைச் சுற்றியும் பற்றுக்கள் அமைவன போலவே, கருத்துப் பொருள்களையும் குறிக்கோட் பொருள் க%ளயும் சுற்றிப் பற்றுக்கள் படிகின்றன. இவற்றை அறப் பற்றுக்கள்" என வழங்குவர். அன்பு, நீதி, நேர்மை, உண்மை போன்ற கருத்துப் பொருள்களைச் சுற்றிப் பற்றுக்கள் ஏற்பட்டு மாளுக்கர்களின் நல்லொழுக் ஆம் வளர்கின்றது. அறப் பற்றுக்கள் யாவும் சமூக வாழ்க்கையின் விளை வால் ஏற்படுபவை. சில சமூகத்திற்கும், சில சமயங்களுக்கும், சில சங் கங்களுக்கும் பல அறப் பற்றுக்கள் தலைமுறைத் தலைமுறையாக வந்து கொண்டிருக்கின்றன. ராஸ்" என்ற உளவியல் அறிஞர் அறப்பற்றுக்கள் a to Lola - experience. * *.pd upgāsār-moral sentiments. • His so - Ross.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/392&oldid=778349" இலிருந்து மீள்விக்கப்பட்டது