பக்கம்:கல்வி உளவியல்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 கல்வி உளவியல் அடைதல் கூடும். அதைத் தெளிவாகக் கருதி அதனை அடைய முயலு வோமாயின், நாம் மிக உயர்ந்த ஒழுக்கநிலைக்கு உயர்ந்துகொண்டிருக் கின்ருேம் என்ற நிலை ஏற்படுகின்றது. இவ்விடத்தில் ஒன்று கினைவுகூர்தற்பாலது. பல பற்றுக்கள் ஏற் பட்டு ஒழுங்கு பெறுங்கால், ஒரு பற்று சிறந்ததாகவும் ஏனையவை தாழ்ந் தவைகளாகவும் அமையும். இச்சிறந்த பற்றை முதன்மைப் பற்று" என வழங்குவர். இத்தலைமைப்பற்றே ஒருவருடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தைக் குறிக்கும். இப்பற்றுதான் ஏனைய பற்றுக்களை ஆட் கொள்ளுகின்றது. ஏனைய பற்றுக்கள் தனித்தனியாக இயங்குவதைவிட அவை இப்பற்றின் கீழ் இயங்கும்பொழுதுதான் ஓர் உயிரியின் நடத்தை யில் ஒருமைப்பாடு அமைகின்றது. மேலும், பிற பொருள்களைச் சுற்றிப் பற்றுக்கள் உண்டாவதுபோல் நம்மைக் குறித்தும் பற்று ஏற்படும். இதைத் தன்-மதிப்புப்பற்று' என்று வழங்குவர் உளவியலார். இதைத்தான் உலகவழக்கில் தன் மானம்' என்று சொல்லுகின்ருேம். இதில் நம்மைச் சுற்றி உள்ளக் கிளர்ச்சிகள் அமைகின்றன. மனிதன் தன்னுடைய தன் மையைத் தனிப்பொருளாகவும் மதிப்புடையதாகவும் கருதுகின்ருன்; பல பட்டறிவுகளைப் பெறுகின்ருன்; தன்-மதிப்பை வளர்க்க முயலுகின்றன். இதன் மூலமாகவே உள்ளத்தெழும் முரண்பாடுகளைத் தீர்த்தல் இயலும்; காந்தியடிகள் போன்ற பெரியார்களிடம் தன்-மதிப்புப்பற்று சிறந்து விளங்குகின்றது; அவர்கள் தன்மையில் ஓர் ஒருமைப்பாட்டையும் காணமுடிகின்றது. பற்றுக்களின் வகை : பற்றுக்கள் இருவகைப்படும். ஒன்று, உடன்பாட்டுப்பற்று; மற்ருென்று, எதிர்மறைப்பற்று. அஃதாவது, நம்மி டம் விருப்பப்பற்றும் ஏற்படலாம்; வெறுப்புப் பற்றும் உண்டாகலாம். சில எடுத்துக் காட்டுக்கள் இதனைத் தெளிவாக்கும். நாட்டுப்புற்று என்ற இயல்பூக்கம் பிற நாடுகளை வெறுப்பதலுைம் அமையல்ாம்; அல்லது தன் சொந்த நாட்டின்மீது கொள்ளும் காதலாலும் ஏற்படலாம். புரட்சி என்ற பற்று குறிக்கோள் நாட்டைக் காணவேண்டும் என்ற அவாவிலுைம் அமையலாம்; அல்லது அன்றைய அரசின்மீது கொண் டுள்ள வெறுப்பினுலும் உண்டாகலாம். உண்மை என்ற பற்று உண்மை என்ற பண்பின் மீது உள்ள ஆர்வத்திலுைம் ஏற்படலாம்; அல்லது o păstroudů upp - master sentiment. 1o šsiruošlůųů ubg - selfregarding sentiment. * * S sör 10 T sTú - Self - respect. * 2 sálGúuú upp! - "love ” sentiment, is GagúLü upg - “hate” sentiment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/394&oldid=778353" இலிருந்து மீள்விக்கப்பட்டது