பக்கம்:கல்வி உளவியல்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கல்வி உளவியல் மாக இருப்பார். காந்தியடிகளின் வாழ்க்கை இதற்கு ஓர் எடுத்துக்காட் டாக அமையும். தன்-மதிப்புப் பற்று : தன்-மதிப்புப் பற்று என்பதை மேலே குறிப் பிட்டோம் அன்ருே: அஃது எங்ங்ணம் வளர்ச்சி பெறுகின்றது என்பதைச் சிறிது ஆராய்வோம். சிறுவன் இளமையிலேயே தன்னைச் சூழ்நிலையி லிருந்து பிரித்து அறிகின்ருன். வெளியுலகுடன் தொடர்புபடுத்திக் கூறப் பெருத அவன் அனுபவக் கூறுகள் யாவும் 'திறன்' என்ற உட்கருவாக (nucleus) அமைகின்றது. இதில் மொழி அவனுக்குத் துணையாக கிற் கின்றது; அவனுடைய சிறப்புப் பெயர்(இடுகுறிப்பெயர்) அவனுக்கு ஒரு கைப்பிடியாக அமைய, அதனைக்கொண்டு பிறவற்றைத் தன்னிலிருந்து பிரித்தறிகின்றன். தான் உயிரி என்றும், பொருள்கள் உயிரிலி என்றும், தான் எதைச் செய்ய இயலும், எதைச் செய்ய இயலாது என்பதையும் பாகுபடுத்தி உணர்கின்ருன் நாளடைவில் தன்னுடைய நடத்தையையே திறனயும் ஆற்றலையும் பெறுகின்றன். தன் தோழர்கள் தன்னைப் புகழ்வ தையும் இகழ்வதையும் காண்கின்ருன்; இச்சமூக அறிவினுல் தன்னை இரண்டு நிலைகளில் அறிகின்றன். தான் சிந்தனையின் இலக்காகவும், சிங் தனையாளனாகவும் இருப்பதை உணர்கின்றன். படிப்படியாகத் தன் னுணர்ச்சி வளரத்தொடங்குகின்றது. இதிலிருந்துதான் தன் மதிப்புப் பற்று உண்டாகின்றது. இதைச் சுற்றித் தன்னெடுப்பு, தன்னெடுக்கம், அச்சம், சினம்போன்ற உள்ளக்கிளர்ச்சிகள் அமைகின்றன. இப்பொழுது தன்னை ஒரு சில விருப்பு வெறுப்புக்கள், எண்ணங்கள், கருத்துக்கள், ஆற்றல்கள், திறன்கள், சுவைகள், வாழ்க்கைக் கோலங்கள் முதலியவற் றின் கிலேகளஞகக் கருதுகின் ருன் தன்னைப்பற்றிய திட்டமான கருத்து அவனிடம் அமைகின்றது; தான் இப்படிப்பட்ட ஒழுக்கமுடையவன்'என் றும் கருதுகின்ருன். தன்னுடைய தோழர்கள் தன்னை நடத்தும் முறை தன் நிலையை அறிவதற்குப் பயன்படுவதோடன்றி, தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறியவும் பயன்படுகின்றது. இது கல்வித்துறைக்கு ஒருசிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. சிறுவர்கள் தங்களைப்பற்றிச் சிறந்த எண்ணங்களைக் கொள்ளும்படி பெற்றேர்களும் ஆசிரியர்களும் வழிவகை செய்யவேண்டும். இஃது அவர்களின் முதற்கடமையேயன்றி முதலாய கடமையுமாகும். தம்மைப் பிறர் நேர்மையுடையவர்கள், உண்மையுள்ளவர்கள், கம்பிக்கை வைக்கத் தக்கவர்கள், உழைப்பாளி கள் என்று கருதினுல் அவர்களும் அவ்வருங் குணங்களுக்குப் பாத்திரர் களாவர் ; தம்மை அப்பண்புடையவர்களாகவே கருதி அங்ங்னமே

  • 4. gsg gwr### - self-consciousness. .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/398&oldid=778362" இலிருந்து மீள்விக்கப்பட்டது