பக்கம்:கல்வி உளவியல்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 379, கின்றது. ஒருவருடைய "தான்' முழுவதும் தீர்மானம் செய்து அதன் படி செயலாற்றுகின்றது. எனவே, மன உறுதி என்பது ஆளுமையின் செயற்படு நிலையாகும். மாக்கேல் என்ற உளவியல் அறிஞர் செயற்படும் ஒழுக்கமே மன உறுதி என்று கூறுவர். பற்றுக்கள் எங்ங்னம் உண்டாகின்றன என்று மேலே கண்டோ மல்லவா? பற்றுக்களில் கல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. இப்பற்றுக் கள் மிக வன்மையாக இருப்பின் தனியாளின் வாழ்க்கையில் கிரந்தரமான இயல்புகளாகப் படிந்து விடுகின்றன. சில சமயம் பற்றுக்களிடையே போராட்டம்:கிேகழ்தல் உண்டு. சில எடுத்துக்காட்டுக்கள் இதனைத் தெளி வாக்கும். “நாளை நடைபெற இருக்கும் தேர்வுக்குப் படிப்பதா, அல்லது இன்றிரவு நடைபெறவிருக்கும் அருமையான படக்காட்சிக்குப்போவதா?” என்று மாளுக்கன் எண்ணுகின்றன். இன்ைெருவன் ஆசிரியர் வேலைக்குப் பயிற்சி பெறுகின்ருன்; பயிற்சி இன்னும் ஒன்றிரண்டு திங்களில் முடிந்து விடும். அப்பொழுது எழுத்தர் வேலை நியமன ஆணை ஒன்று அவனை வந்தடைகின்றது. "பயிற்சியை முடிப்பதா, அன்றி எழுத்தர் பதவியை ஏற்றுக்கொள்வதா?’ என்று கலங்கி நிற்கின்றன். இன்னொரு இளைஞன், "காதலுக்கத்தை நிறைவேற்ற இல்லத்திலிருப்பதா, அல்லது சமூகத் தொண்டு புரிய வெளிச் செல்வதா?’ என்று சிந்தனை செய்கின்ருன். இரண்டிலுமுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இஃது அவனுடைய பற்றுக்களைப் பொறுத்த தாகும்.இத்தகைய இடர்ப்பாடான நிலைகளில்தான் மேலே குறிப்பிட்ட தன் மதிப்புப்பற்று துணையாக நிற்கின்றது. அஃது அவனுககு வேண்டிய ஆற்றலைத் தந்து பிறவழிகளைப் புறக்கணித்து அடக்கியாளச் செய்யும். அஃதாவது, தாழ்ந்த உள் துடிப்புக்களையும் இயல்பூக்கங்களையும் குறிக் கோளாக கிற்கும் தன் மதிப்புப்பற்றின் ஆற்றலால் வெல்லுதல் ஆகும். மன உறுதியின் உரம் இயல்பூக்கங்களின் அடிப்படையில் இயங்கும் உள்துடிப்புக்களின் உரத்தைப் பொறுத்தது. மன உறுதியின் தரம் அவன் கொண்ட குறிக்கோளின் தரத்தையும், போராடும் குறிக்கோள்க ளின்மையையும் பொறுத்தது. குறிக்கோள் சிறப்பாக அமையின் மன உறுதியும் சிறந்ததாக அமையும்; ஒழுக்கமும் உயர்ந்ததாக அமை யும். எனவே, மாளுக்கர்களிடம் சரியான மன உறுதி அமைய ஆசிரியர் களும் பெற்றேர்களும் தக்க கவனம் செலுத்தித் தகுந்த நிலையில் பயிற்சி யும் அளித்தல் வேண்டும். so Guru rú. Lú, - conflict. si srgššir - clerk.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/401&oldid=778371" இலிருந்து மீள்விக்கப்பட்டது