பக்கம்:கல்வி உளவியல்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கல்வி உளவியல் வதற்குப் பள்ளி வாழ்க்கையிலேயே பல வாய்ப்புக்களை நல்கி அவற்றின் மூலம் பயிற்சி யளித்தல் வேண்டும். துணிவு உண்டாக வேண்டுமாயின், துணிவை வெளியிட வாய்ப்பு வேண்டும். பெரியோர்களின் எடுத்துக் காட்டும் இன்றியமையாதது. அறிவுரையால் பயனில்லை; செய்து காட் டலே வேண்டப்பெறுவது. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.” பள்ளியின் அன்ருட நிகழ்ச்சிகளில் சிறுவர்களிடம் பயன்படும் பல பழக்கங்களை ஏற்படுத்தலாம்; வளரச் செய்யலாம். பட்டறிவு மிகமிக மாளுக்கர்கள் தம் மனச்சான்றிற்குப் பொருந்தும் செயல்களையே செய்ய விழைகின்றனர். தங்கள் நடத்தையையும் பிறர் நடத்தையையும் மதிப் பிடவும் முயல்கின்றனர். விளையாடுகளத்தில் நல்லொழுக்க வளர்ச்சிக்குப் பல வாய்ப்புக்கள் தரலாம். ஒவ்வொருவகை விளையாட்டிற்கும் தலைமைப் பொறுப்பு மாளுக்கர்களுக்கே தரலாம். பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேர்தல் முறை யில் மாளுக்கர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுங்கால் இதற்குப் பல வாய்ப்புக்கள் எழுகின்றன. பள்ளியின் குழுஉக் கிளர்ச்சி விளையாட்டுக்களாலும்,பள்ளிவிழாக் களாலும், இலக்கியக் கழகங்களாலும், பல்வேறு போட்டிகளாலும், ஆசிரி யரின் செயல்களாலும் வளர்க்கப்பெறுகின்றது. நாட்டுப்பற்று, சர்வ தேசப்பற்று, வாழ்க்கை நோக்கம், சகோதரத்துவம், சமதருமம், சமூகத் தொண்டு போன்ற பண்புகள் பள்ளியில்தான் வளர்க்கப்பெறுதல்வேண் டும். பிற்காலத்தில் மாணுக்கரின் முழுமையான வாழ்க்கையின் நோக் கத்தைப் பள்ளி ஓரளவு நிறைவேற்ற வேண்டும். மேற் கூறியவை கிறை வேருவிடில், பள்ளி எதைச் சாதித்தாலும் பயனில்லை. ஒழுக்கமே வாழ்க்கைக்கு விழுப்பம் தருவது; அதுவே வாழ்க்கையின் உயிர்நாடி என்பதைப் பயிற்றுவோர் என்றும் நினைவில் வைத்துப் பணியாற்ற வேண்டும்.

    • Фрат - 664, 4 o gigs &šlsтišši - espirit-de-corps.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/406&oldid=778383" இலிருந்து மீள்விக்கப்பட்டது