பக்கம்:கல்வி உளவியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கல்வி உளவியல் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. அது யாதெனில், ஒரு விளைவை இயற்றக்கூடிய பல கூறுகளுள் நாம் ஆராயும் கூற்றினைத் தவிர ஏனையவற்றை மாருது வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அங்கிலையில் இக் கூற்றினது தனிவன்மையை மதிப்பிடல் இயலாது. இன்று இத்தகைய ஆய்வு முறை உளவியலிலும் பயன்படுகின்றது. இத் துறையில் அதனைக் கையாளுவது கடினம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அறிவியல் துறைகளில் திட்டமாகப் பயன்படுத்தப்பெறும் அனவுக்கு இம்முறையை உளவியலில் கையாள முடியாதுதான். காரணம், மிகச்சிக்கலானதொரு மனித நிலையில் செயற்படும் எல்லாக் கூறுகளையும் கண்டறிந்து, இக்கூறுகள் எல்லாவற்றிலும் சமமான இரண்டு தொகுதி கனக் கண்டுபிடிப்பது அரிது என்பது ஒன்று. மற்றென்று, சோதனை முறையில் சோதிக்கப்பெறும் இயற்கை வளர்ச்சி தடைப்படலாம்; அல்லது அபாயத்திற்குட்படலாம். எனினும், அண்மைக் காலத்தில் இம் முறையின் காரணமாக உளவியல் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. கல்வி உளவியலில் பல ஆய்வுகளையும் பல நுண் கருவிகளையும்கொண்டு அரிய பெரிய உண்மைகளைக் கண்டுள்ளனர். பல்வேறு படிப்புமுறை, மனப்பாடம் செய்வதிலுள்ள கூறுகள், கவனத்தின் தன்மைகள் போன்றவைகளிலுள்ள பல பிரச்சினைகளுக்கு இம்முறையில் தீர்வு கண்டுள்ளனர். புள்ளியியல் புள்ளியியல் முறை இன்றைய அறிவியல் துறை கனில் சிறந்ததோன் இடம் பெறுகின்றது. கல்வி உளவியலிலும் இது சிறந்தமுறையில் பயன்பட்டிருக்கின்றது. புள்ளியியல் முறை என்பது கணிதத்துறையைச் சார்ந்த ஒரு முறை. புள்ளி விவரங்களைச் சேகரித்து ஒழுங்குபடுத்தி, வகுத்து, அளவு முறையில் அவற்றின் பொருண்மை காணும் ஒரு கணித முறை இது. இம் முறையால் ஆராய்ச்சி நிலைகளின் குறைபாட்டைப் பெரும்பாலும் கிறைவாக்கிக் கொள்ளலாம்; பரிசோதனை விவரங்களின் போக்கையும் நாம் கொண்ட முடிவுகளின் உண்மையையும் கணித முறையாகக் காணலாம். அன்றியும், சில ஆராய்ச்சிகளில் சாதார ணமாக மாருமல் வைக்கமுடியாத சில கிபந்தனைகளைப் புள்ளிக்கணித முறையில் மாருதனவாக இயற்றிக் கொள்ள முடியும். இரண்டு பண்பு களின் இணைப்பொற்றுமையை'-தொடர்பை-வருணிப்பதே இம்முறை வின் உயிர்காடி. . ಕ್ಲಿಲ್ಲ எடுத்துக்காட்டுக்கள் இதனைத் தெளிவாக்கும். உடல் வளர்ச்சிக்கும், _அறிதிற க்கும், குழ்கிலச் சிறப்புக்கும் அதில் sous-statisti .." இனப்பெற்றுமை-correlation."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/41&oldid=778391" இலிருந்து மீள்விக்கப்பட்டது