பக்கம்:கல்வி உளவியல்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-------- மதிப்பீடும் சோதனையும் 389 எடுத்துக்காட்டியுள்ளனர். அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டு கூறுவோம். குறைகள் : (1) இந்த ஆய்வுகளால் அளந்தறியக்கூடிய பொரு ளறிவு மிகக் குறைவு. சிறிய கால அளவில் ஆண்டு முழுவதும் படித் தறிந்த பாட அறிவை ஐந்தாறு விளுக்களால் தேறிவிட முடியும் என்று எண்ணுவது பொருந்தாததொன்று. ஒரு விைைவத் தப்பாகப் புரிந்து கொள்பவர் அல்லது அவ்விடையின் பகுதி கற்பிக்கப்பட்டபொழுது பள்ளிக்கு வாரா திருந்தவர் சரியாக விடையிறுக்க முடியாது போகக் கூடும். (2) ஆய்வாளர்கள் விடையேடுகளே ஒரே பொது நோக்கமும் ஒரிேவித நோக்கமும் கொண்டு திருத்துகின்றனர் என்று கூறுவதற்கில்லை. விடை களின் தகுதியையறிந்து ஏற்ற மதிப்பெண்களைக் கொடுப்பது ஆய்வாளர் களின் மனநிலையையே பொறுத்திருக்கின்றது. முக்குணவசத்தால் முறை பிறழ்ந்து போவதுடன் கில்லாது, சினம், மகிழ்ச்சி முதலியவற்றிற்கேற்ப மதிப்பெண்கள் குறைந்தும் மிகுந்தும் போகக்கூடும். (3) கட்டுரை என்பது பல கூறுகளைக் கொண்ட திறனுல் உண் டாக்கப் பெற்றதொரு படைப்பு. ஒவ்வொருவரும் தத்தமக்கேற்றவாறு அளவுகோல்களை மாற்றிக்கொண்டு மதிப்பிடுவர். (4) இவ்வாய்வால் பெறும் மதிப்பெண்கள் நம்பத்தகுந்தவையல்ல; மாறுபாடில்லாதவையுமல்ல. நன்கு மதிப்பிட வேண்டுமாயின் அதிகக் காலம் ஆகும். பொருளறிவு இல்லையாயினும் சொற்றிறமையால் அதிக மதிப்பெண்கள் பெறுதல் கூடும். நிறைகள் : (1) ஆய்வுகளை ஆயத்தம் செய்வதும் எளிது; கையா ளுவதும் எளிது. விளுக்களுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பது பற்றித் தேர்வாளர் மாளுக்கர்கட்கு விளக்கத் தேவை இல்லை. (2) பள்ளிக் கல்விஏற்பாட்டிலுள்ள எல்லாப் பாடங்கட்கும் இம் முறை ஆய்வுகளை எளிதில் கையாளலாம். (3) பொருள்களின் வரையறைவுகள் கூறுவது, தெளிவுபடுத்திக் காட்டுவது, தொகுப்பது, வகுப்பது, விரிப்பது, சுருக்குவது முதலிய திறன்களையெல்லாம் இவ்வகை ஆய்வுகளால்தான் அளந்தறிய இயலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/411&oldid=778395" இலிருந்து மீள்விக்கப்பட்டது