பக்கம்:கல்வி உளவியல்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பீடும் சோதனையும் 397. (2) ஆண்டு அறிக்கைகள், சிற்றறிக்கைகள், மாளுக்கர் கைப் புத்தகங்கள் போன்ற அதிகாரப் பூர்வமான அறிக்கைகள்; (3) தேர்ச்சி அறிக்கைகள், பெற்ருேர்க்கு எழுதும் கடிதங்கள் ஆகியவை ; (4) கதம்பம், பொதுநிகழ்ச்சிகள், காட்சிப்பொருள்கள் போன் றவை. இவற்றுள் ஆசிரியர்-பெற்ருேர் உறவுமுறையினை வளர்க்கக்கூடிய மூன்ருவதாகக் குறிப்பிடப்பெற்றவற்றை மட்டிலும் சிறிது விளக்கு வோம். பல்லாண்டுகளாகத் தேர்ச்சி அறிக்கைகள்தாம் ஆசிரியர்-பெற்ருேர் உறவினை நேர்முறையில் வளர்க்கும் சாதனங்களாக இருந்து வந்தன. சாதாரணமாக இவற்றில் மாளுக்கன் பள்ளிக்கு வந்த காட்கள், மாளுக்கன் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கின மதிப்பெண்கள் ஆகியவை மட்டிலும்தான் இடம் பெற்றிருந்தன. அண்மைக் காலத்தில் இவற்றில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாற்றங்களைப் பெற்றேர்கள் பெரிதும் விரும்புகின்றனர் எனத் தெரிகின்றது. மதிப்பெண்களைக் குறிப்பிடுங்கால் அவற்றுடன் ஒவ்வொரு பாடத் திலும் வகுப்பின் சராசரி மதிப்பெண்களும் குறிக்கப்பெறுதல் மிகவும் இன்றியமையாதது. இல்லாவிடில், பெற்றேர்களுக்குத் தங்களுடைய குழந்தைகள் எந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பெருத வர்கள் என்பது தெரியாது. மேலும், இசன்ற தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்பதும் தெரியாது. எடுத் துக்காட்டாக, ஒரு மாளுக்கன் கணக்குத் தேர்விலும் தமிழ்த் தேர்விலும் 45 மதிப்பெண் பெறலாம். கணக்கில் வகுப்பு சராசரி 60 ஆகவும் தமிழில் 35 ஆகவும் இருந்தால், அம் மாளுக்கன் கணக்கில் மட்டம் என்றும், தமிழில் சராசரி மாளுக்கனவிட மேலான தேர்ச்சி பெற்றுள் ளான் என்பதும் தெளிவாகும். இப்படிச் சராசரி மதிப்பெண்களைக் குறிப் பிடாவிட்டால், கணக்கு, தமிழ் ஆகிய இரண்டிலும் ஒரே அளவு தேர்ச்சி பெற்றிருப்பதாகக் கருதுதல் கூடும். மேலும், சென்ற தேர்வில் கணக்கில் 45 வாங்கியிருந்து இந்தத் தேர்வில் 55 வாங்கில்ை, சாதாரண மாக எல்லோரும் மாளுக்கன் முன்னேற்றம் அடைந்திருப்பதாக எண்ணுவார்கள். ஆனல், சென்ற தேர்வில் வகுப்பு சராசரி 35 என்றும், இந்தத் தேர்வில் 65 என்றும் இருந்தால், சென்ற தேர்வில் வகுப்புச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/419&oldid=778409" இலிருந்து மீள்விக்கப்பட்டது