பக்கம்:கல்வி உளவியல்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 கல்வி உளவியல் வளைந்து கொடுக்காத நடைமுறைகளால் தன் அருட்பணி குன்றிய ஆசிரியரும் மிகவும் மகிழ்ச்சியும் திறனும் அற்ற வகுப்புத் தலைவராகத் தான் திகழ முடியும். ஆனால், தொழிலில் முதிர்ச்சி பெற்ற ஆசிரியர் தன்னுடைய தேவைகளை யறிந்து அவற்றை நிறைவு செய்து கொள் வதுடன், தான் யாருக்காகப் பணியாற்றுகின் ருரோ அக் குழந்தை களின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ முடியும். எனவே, ஆசிரியருக்கும் ஆசிரியத் தொழிலுக்கும் இன்றி யமையாத ஒரு சில செய்திகளை ஈண்டு ஆராய்வோம். ஆசிரியர்-ஒரு முதிர்ந்தோர் பொருத்தமுறுதலே கல்வி என்றும், அப் பொருத்தமுறும் செயலில் துணை புரிவதே ஆசிரியரின் அருட்பணி என்றும் பல இடங்களில் வற் புறுத்தினேம். இந்தப் பணியை நிறைவேற்றும் ஆசிரியர் முதலில் தான் சமூகச் சூழ்நிலைக்குப் பொருத்தமுறுதல் வேண்டும். ஆசிரியருக்குச் சூழ்நிலை தரும் மனநிறைவுகளும் மன முறிவுகளும்’ ஆசிரியர்களுடைய வாழ்க்கை நிலைமையும் மனநலத்தையும் பாதிக்குமன் ருே? எனவே, ஆசிரியரும் நாமும் வாழும் சூழ்நிலை எத்தகையது? அதில் பொருத்த முறுதலில் நேரிடும் இடர்ப்பாடுகள் யாவை? என்பதை ஆராய்வது இன்றியமையாத தாகின்றது. ஏனையவர்களைப் போலவே, ஆசிரியர்களும் மனிதர்களே. மனிதர் களுக்குத் தேவையானவை அனைத்தும் ஆசிரியருக்கும் தேவையே, கம் முடைய பண்டைக்காலப் பண்பாடுகள், கொள்கைகள், எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவை மேட்ைடுப் பண்பாடுகள், அறிவியல் கொள்கைகள் முதலியவற்றல் மோதப்பெற்றுக் குழப்பங்களை விளைவிக்கின்றன. நவீன வாழ்க்கைக் கேற்ப ஆசிரியரின் தேவைகள் அதிகமாகின்றன. இத்தேவைகள் கிறைவுபெருவிடில் ஆசிரியர்கள் மனநலத்துடன் பணியாற்றுவது எங்ங்ணம் ? வரவர மிகவும் சிக்கலாகிக்கொண்டு வரும் இன்றைய சமூகச் சூழ்நிலையில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன. தன்னலம், இறுமாப்பு, அதிகார வெறி, போட்டிமனப்பான்மை, போரில் அல்லது தேர்தலில் வெற்றி பெறும் ஆசை இவைபோன்றவை ஒருபுறம் காட்சி யளிக்கின்றன. மற்ருெரு புறம் பொதுநலம், சகோதரத்துவம், a los résopaj-satisfaction. " to surgpfla-frustration. 8 lo smrtssvið mental hygiene.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/422&oldid=778418" இலிருந்து மீள்விக்கப்பட்டது