பக்கம்:கல்வி உளவியல்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 கல்வி உளவியல் ஆசிரியத் தொழிலில் ஒரு சோர்வு ஏற்படும். ஆனால், ஆசிரியர் தொடர்ந்து கற்றுத் தன் அறிவைப் பெருக்கிக் கொண்டே யிருப்பின் இச்சோர்வு தலை காட்டாது; கற்பித்தல் மகிழ்ச்சியுடன் நடைபெறும்; ஆசிரியரும் உணர்வூட்டும் அனுபவத்தைப் பெறுதல் இயலும். கற்றலால் ஆசிரியருக்கு அறிவுப் பெருக்கம், புதிய அனுபவம் முதலியன ஏற்படுவதோடன்றி, வேறெரு நன்மையும் உண்டு. அது மாளுக்கருக்குக் கிடைப்பது. ஆசிரியர் கற்றலைப்பற்றி மாணக்கர்கட்கு அடிக்கடிக் கூறும் அறவுரைகளைவிட, கற்பிக்கும் பொருளைவிட, அவ. ருடைய நடத்தையே ஓர் எடுத்துக்காட்டாக அமையும், மாளுக்கர்கள் ஆசிரியரின் அடிப்படை மனப்போக்குகளே கன்கு அறிந்து, கற்றலை கன் முறையில் மேற்கொள்வர். சதா படித்துத் தன் அறிவினைப் பெருக்கியும், அவ்வறிவினைத் தக்க முறையில் பயன்படுத்தியும் வரும் ஆசிரியரின் உற்சாகம் மாளுக்கரிடம் ஒரு தொற்றுநோய்போல் பரவி நற்பயனை விளை விக்கும். பள்ளி நிர்வாகத்தில் ஆசிரியர் கற்றலுக்கேற்ற நூலக வசதி, கள், நூலகத்தில் இருக்கை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். - கற்பித்தல் துறையிலும் எத்தனையோ அன்ருடப் பிரச்சினைகள் எழுகின்றன: இவற்றைப் பலர் கலந்து ஆராயும் வாய்ப்புக்கள் வேண் டும். கல்வி உளவியல் துறையிலும் எத்தனையோ ஆராய்ச்சிகள் வெளி. வந்த வண்ணமிருக்கின்றன. எனவே, இவைபற்றிய ஆராய்ச்சி இதழ் களையும் நூல்களையும் நூலகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டியது கிர் வாகத்தின் கடமை. ஆசிரியர் இவற்றை யெல்லாம் நன்கு படித்து. தம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல் வேண்டும். இன்று நம் காட்டில் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக நிறுவப்பெற்றுள்ள அனைத்திந்திய ஆலோசனைக் கழகத்தின்’ ஆதரவில் பல பயிற்சிக் கல்லூரிகளில் அமைக்கப்பெற்றுள்ள விரிவுப் பணித்துறைகள்** இதற் கேற்ற வாப்ப்புக்களை அமைத்துத் தருகின்றன. அத்துறையினர் ஆசிரியத் தொழில்பற்றிய பல நூல்களையும் ஆராய்ச்சி இதழ்களையும் வழங்கி ஆசிரியர்களுக்குப் படிக்கும் வாய்ப்புக்களைத் தருகின்றனர். ஆசிரியர்கள் அவ்வாய்ப்புகளே கன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துறையினர் அடிக்கடி ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு

    • All India Council for Secondary Education. * * Soflājūugoslågsøp-Extension Services.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/428&oldid=778428" இலிருந்து மீள்விக்கப்பட்டது