பக்கம்:கல்வி உளவியல்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 கல்வி உளவியல் வேலையின் அளவினையும் சிறிதும் கருத்தில் கொள்ளாது அளவுக்கு மீறிய வீட்டு-வேலையைச் செய்து வரும்படி ஏவுகின்றனர். இதல்ை. மாளுக்கனுக்குத் தேவையான ஓய்வு, புறச் செயல்கள், தூக்கம் முதலி யவை இல்லாமற் போகின்றன. மாளுக்கரின் வேலைகளுக்கு மதிப்பெண் வழங்குதல், மேல் வகுப்புக்கு மாற்றுதல், பெற்ருேர்கட்கு அறிக்கைகள் அனுப்புதல் போன்ற பிரச்சினை களை ஆராய்வதற்கும் ஆசிரியர்களின் உறவு மிகவும் இன்றியமையாதது. பள்ளி வேலை நிரலில் தொடர்ந்தாற்போல் மேம்பாடு காண வேண்டு மாயின், கற்பித்தல்-கற்றல் நிலைமைகளின் காரணங்களிலும் திட்டமான நோக்கங்களிலும் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பெறுதல் வேண்டும். இதற்கு ஆசிரியர்களின் கூட்டுறவு மிகவும் இன்றியமையாது வேண்டற்பாலது. பயிற்சிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பயிற்சி பெறுங்கால் இவ் வொத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை, அதிகமாக வற்புறுத்துவதில்லை; பல ஆசிரியர்கள்-ஆசிரியத்துறை 'ஜாம்பவான்கள் பலர்-அடிக்கடி கலந்து ஆய்வதால் பல நன்மைகள் விளைகின்றன என்ற சமூகக் கல்வி உளவியலின் முக்கிய கூறினை அங்கு எடுத்துக் காட்டுவதில்லை. நற்பேறு வசமாக, இன்று அதில் ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கின்றது. கல்வி முன்னேற்றத்திற்கு இத்தகைய ஒத்துழைப்பும் கலந்தாய்தலும் பெருநன்மையை விளைவிக்கின்றன. மூன்று முறைகளில் இக் கூட்டுறவை வளர்க்கலாம். (i) தொழிலிலிருந்து கொண்டே பெறும் பயிற்சி : ஒரு பள்ளியி லுள்ள ஆசிரியர்களிடையேயும், பல பள்ளிகளின் ஆசிரியர்களிடையேயும் கூட்டுறவை வளர்ப்பதற்கு இத்தகைய பயிற்சி மிகவும் வேண்டற்பாலது; விரும்பத்தக்கது. தனிப்பட்ட ஆசிரியருக்கும் பன்னிக்கும் அஃது எவ்வடி வத்தில் உருப்பெற வேண்டும் என்பது அதில் பங்கு பெறும் ஆசிரியர் களின் தரத்தையும், அவர்கள் காட்டும் அக்கறையையும் பொறுத்தது. என்ருலும், அதன் சிறப்பியல்களைச் சிறிது குறிப்பிடலாம். முதலில் அது பள்ளி நடவடிக்கைகளில் திட்டமான மேம்பாடுகளைக் காண்பதற்கு ஆசிரியர்களின் ஐக்கிய முயற்சி என்பதாகக் கருதப்பெறு தல் வேண்டும். வெறும் சொற்பொழிவுகளால் உண்மையான தேவை களை அறிதல் இயலாது. சரியாக மேம்பாடு காணவேண்டுமாயின் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அதில் பங்கு கொண்டு ஆராய வேண்டும்; ஒவ்வொரு பள்ளிப் பிரச்சினைகளையும் அதில் அலசி ஆராய வேண்டும். பள்ளி ஆசிரியர்க் கழகத்தின் ஆதரவில் இந்த ஆராய்ச்சிகளை மேற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/432&oldid=778437" இலிருந்து மீள்விக்கப்பட்டது