பக்கம்:கல்வி உளவியல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 23 னும், உடலும் உள்ளமும் நெருங்கிய தொடர்புடையவை ; இவ்விரண் டையும்பற்றிக் கூறும் தொழில்களை முற்றிலும் பிரிக்க இயலாது. பொது வாகக் கூறுமிடத்து, உடல் உறுப்புக்களின் வேலையாகிய செரிமானம், குருதியோட்டம் போன்றவைகளை உடலியல் விளக்குகின்றது. உள்ளத் தின் செயல்களாகிய சிந்தனை, நினைவு, உணர்ச்சி, முயற்சி போன்ற வற்றை உளவியல் உரைக்கின்றது. எனினும், ஒவ்வோர். இயக்கத்திற் கும் உடற்கூறும் உண்டு உளக்கூறும் உண்டு. எடுத்துக்காட்டாகப் பேச்சை நோக்குவோம். பேச்சு நாவினுடையவும் மூளையினுடையவு மான இயக்கங்களைப் பொறுத்தது. ஆனால், பேசக் கற்றல் உள்ளத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது. செரிமானம் உடலுறுப்புக்களின் செயலாயினும், அது சினத்தால் கெடுகின்றது. அதுபோலவே, மன மகிழ்ச்சி செரிமானத்தை விரைவாக்குகின்றது. பொறிகளின் அமைப் பும் இயக்கமும் உடலியலிலும், அவை வளரும் வழிகள் உளவியலிலும் விணக்கப்பெறுகின்றன. உளவியலும் உயிரியலும் : உயிரியல்' உயிரிகளைப்பற்றிய நூலா கும். உளவியல் உள்ளத்தைப்பற்றியது. உயிரியல் நன்ருக வளர்ந்த ஓர் அறிவியல் துறை. அது உடலியல், பிராணியியல், வளர்ச்சி இயல் போன்ற துறைகளைக் கொண்டது. 1859-ஆம் ஆண்டில் டார்வின் இனங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். இதன் மூலம் காரியசித்திவிதி, ஆயத்தவிதி, தேர்தல் நன்மைகள், இயல் பூக்கங்கள் முதலிய உளவியற் கருத்துக்கள் தோன்றின. உயிரியல் முறைகள் மூலம் ஆய்வகச் சோதனைகளும், மிருக உளவியற் கல்வியும் வளர்ந்தன. பிராணி உளவியற் கல்வியின் ஓங்கிய வளர்ச்சி, உன வியலுக்கும் கல்வியியலுக்கும் பெரிதும் பயன்பட்டுளது. உளவியலும் சமூகவியலும் : உளவியல் தனியாளின் செயல்கள்ை விளக்குவது; சமூகவியல்? குழுக்களின் செயல்களை எடுத்துரைப்பது. சமூகவியல் சமூகங்கள், கிலேயங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, Eாகரிகம் போன்றவற்றைக் கூறுகின்றது. உளவியல் சமூகங் களின் உறுப்பினர்களின் செயல்களை ஆராய்கின்றது. சுருங்கக் கூறின், சமூகவியல் குழுவினரின் உள்ளம் இயங்குவதையும், உளவியல் தனி. பாளின் உள்ளம் செயற்படுவதையும் ஆராய்கின்றன. ஓர் எடுத்துக்காட் டால் இதனை விளக்குவோம். சட்டசபைத் தேர்தலில் ஒரு கூட்டத்தார் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தத்துவத்தைச் சமூகவியல் தெரிவிக்கின்றது. * * *-ūifusio-biology. *4 qusríá & @u&---genetig8. கே சமூக sĤugš--socioło*Vs

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/44&oldid=778453" இலிருந்து மீள்விக்கப்பட்டது